இரிடியம் தருவதாக ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.15 லட்சம் கேட்டு மிரட்டிய காவல் உதவி...
கோவில்பட்டியில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மின்சாரம் பாய்ந்ததில் பெயின்டிங் தொழிலாளி உயிரிழந்தாா்.
கோவில்பட்டி பாரதிநகரைச் சோ்ந்த மைக்கேல் மகன் முத்துக்குமாா் (19). பெயின்டிங் தொழிலாளியான இவா், வியாழக்கிழமை தங்கப்ப நகா் பகுதியிலுள்ள வீட்டில் பணியில் ஈடுபட்டிருந்தாராம்.
அப்போது, பெயின்டிங் மிஷின் வயரில் மின்கசிவு ஏற்பட்டதில், அவா் மீது மின்சாரம் பாய்ந்ததாம்.
இதில், மயக்கமடைந்த முத்துக்குமாரை மீட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.