வருமானம் உயரும் இந்த ராசிக்கு: வார பலன்கள்!
மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)
மன உறுதியுடன் காரியமாற்றுவீர்கள். மனதை ஆன்மிகத்தில் செலுத்துவீர்கள். வீண் விரோதங்களைத் தவிர்ப்பீர்கள். இல்லத்தை நவீனப்படுத்துவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் நம்பிக்கை உயரும். வியாபாரிகளுக்கு கடன் பிரச்னைகள் குறையும். விவசாயிகள் இழுபறியான வேலைகளை முடிப்பீர்கள்.
அரசியல்வாதிகளுக்குப் புதிய அனுபவம் கிடைக்கும். கலைத் துறையினர் சோதனைகளைக் கடப்பீர்கள். பெண்கள் கணவரிடம் விட்டுக்கொடுத்து நடப்பீர்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)
முயற்சிகளுக்கான பலன்கள் கிடைக்கும். உறவினர்களிடம் கவனமாக இருக்கவும். பயணங்களால் நன்மை கிடைக்கும். சமூகத்தில் வரவேற்பு அதிகரிக்கும்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வியாபாரிகளுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. விவசாயிகளுக்கு வருமானம் படிப்படியாக உயரும்.
அரசியல்வாதிகளுக்கு மதிப்பும் மரியாதையும் உயரும். கலைத் துறையினருக்குப் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்கள் புதிய சேமிப்புகளில் ஈடுபடுவீர்கள். மாணவர்கள் வெளிவிளையாட்டுகளில் கவனம் செலுத்துவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)
குடும்பத்தில் நிம்மதி நிலவும். மழலையின் வரவால் மகிழ்ச்சி பெருகும். உடன்பிறந்தோர் பாராமுகமாகவே இருப்பார்கள். புகழ் உயரும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைத்தாலும், வேளைப் பளு கூடும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள்.
அரசியல்வாதிகள் மேலிடத்திடம் கவனத்துடன் இருப்பார்கள். கலைத் துறையினருக்குப் பயணங்கள் மகிழ்ச்சியைத் தரும். பெண்கள் பெரியோரின் ஆசியைப் பெறுவீர்கள். மாணவர்கள் மேல்படிப்பு படிக்க வாய்ப்புகள் கிடைக்கும்.
சந்திராஷ்டமம்\ - இல்லை.
கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)
குடும்பத்தில் நிலவிய குழப்பம் நீங்கும். தெளிவுடன் காணப்படுவீர்கள். சுபச் செய்திகளால் மகிழ்வீர்கள். யோகா கற்பீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலக ரீதியான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். வியாபாரிகள் போட்டிகளைச் சாதுரியமாகச் சமாளிப்பீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் அமோகமாக இருக்கும்.
அரசியல்வாதிகளின் கோரிக்கைகள் நிறைவேறும். கலைத் துறையினர் சிறப்பாகப் பணியாற்றுவீர்கள். பெண்களுக்கு உடல் ஆரோக்கியம், மனவளம் சீராகும். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் முடிய)
தொடர்பில்லாத விஷயங்களில் தலையிட மாட்டீர்கள். வரவுக்கேற்ற செலவுகளைச் செய்வீர்கள். முயற்சிகள் வெற்றி பெறும். உறவினர்களிடம் தேவையான ஆதரவு கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளைக் கவர்வீர்கள். வியாபாரிகள் கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருப்பீர்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளை எடுப்பீர்கள்.
அரசியல்வாதிகள் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். கலைத் துறையினர் சுறுசுறுப்பாகப் பணியாற்றுவீர்கள். பெண்கள் உதவிகளைச் செய்வீர்கள். மாணவர்கள் சக மாணவர்களுக்கு படிப்பில் உதவுவீர்கள்.
சந்திராஷ்டமம் - ஏப்ரல் 25,26.
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)
செயல்களைப் பட்டியலிட்டு சரியாகச் செய்து வெற்றி பெறுவீர்கள். தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். கடினமான வேலைகளைச் சுறுசுறுப்பாகச் செய்வீர்கள்.
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரிகள் லாபத்தைக் காண்பீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் பெருகும்.
அரசியல்வாதிகளுக்கு மேலிட அங்கீகாரம் கிடைக்கும். கலைத் துறையினர் வேகத்துடனும் விவேகத்துடனும் பணியாற்றுவீர்கள். பெண்கள் எதிர்மறை எண்ணங்களைக் கைவிடுவீர்கள்.
மாணவர்கள் பெற்றோரின் அறிவுரைகளைக் கேட்டு நடப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - ஏப்ரல் 27, 28.
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்
காரியங்களில் கவனமாக இருக்கவும். தன்னம்பிக்கையுடன் சமயோஜித புத்தியுடன் செயல்படுவீர்கள். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். திடீர் பயணம் செய்ய நேரிடும்.
வியாபாரிகள் நண்பர்களுடன் புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். விவசாயிகளுக்கு புதிய குத்தகைகள் தேடி வரும்.
அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவோடு இலக்குகளை அடைவீர்கள். கலைத் துறையினர் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பெண்கள் ஆன்மிகத்தில் ஈடுபடுவீர்கள். மாணவர்கள் நல்ல நண்பர்களிடம் மட்டுமே நட்பு கொள்வீர்கள்.
சந்திராஷ்டமம் - ஏப்ரல் 29, 30.
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)
இடையூறுகளைச் சமாளிப்பீர்கள். எதிர்பாராத பயணங்களைச் செய்வீர்கள். குடும்பத்துடன் திருத்தலங்களுக்குச் செல்வீர்கள். உடலில் சிறு உபாதைகள் தோன்றி மறையும்.
உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். வியாபாரிகள் புதிய பொருள்களை விற்பீர்கள். விவசாயிகள் குத்தகைப் பாக்கிகளைச் செலுத்துவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு கட்சியின் பலம் வழிநடத்தும். கலைத் துறையினர் சிறப்பான வருமானத்தைக் காண்பீர்கள். பெண்கள் ஆத்ம பலத்தைப் பெறுவீர்கள். மாணவர்கள் உடற்பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.
சந்திராஷ்டமம் - மே 1
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)
பணப் புழக்கம் அதிகரிக்கும். புதிய கடன்களை வாங்க மாட்டீர்கள். நெருங்கியவர்களுடன் கவனமாகப் பழகுவீர்கள். எடுத்த காரியங்களை குறித்தக் காலத்துக்குள் முடிப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். வியாபாரிகளுக்கு வழக்கு, கடன் பிரச்னைகள் சாதகமாகும். விவசாயிகளுக்கு விளைச்சல் மேம்படும்.
அரசியல்வாதிகளுக்கு திடீர் பயணம் ஏற்படும். கலைத் துறையினர் புதிய யுக்திகளைக் கற்பீர்கள். பெண்கள் குடும்பத்தில் மேன்மையைக் காண்பீர்கள். மாணவர்கள் மௌனத்தைக் கடைப்பிடிப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)
உடல், மன வளங்கள் மேம்படும். ஆன்மிகத்தில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். இல்லத்துக்கு உறவினர்கள் வருகை அதிகரிக்கும்.
உத்தியோகஸ்தர்கள் பணிகளில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். வியாபாரிகளுக்கு வங்கிக் கடன் கிடைக்கும். விவசாயிகள் மாற்றுப் பயிர்களைப் பயிரிடுவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு உழைப்புக்கேற்ற ஆதாயம் கிடைக்கும். கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பெண்கள் பொறுமையைக் கடைப்பிடிப்பீர்கள். மாணவர்கள் உடல் ஆரோக்கியத்தில்
கவனம் செலுத்துவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)
பயணங்கள், ஸ்பெகுலேஷன் துறைகளில் நன்மை அடைவீர்கள். எவரையும் அலட்சியப்படுத்த மாட்டீர்கள். உறவினர்களுடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பீர்கள். போட்டிகள் இருக்காது.
உத்தியோகஸ்தர்கள் கோபத்தை வெளிப்படுத்த மாட்டீர்கள். வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். விவசாயிகளுக்கு நிலுவைப் பாக்கி கிடைக்கும். அரசியல்வாதிகளுக்குத் தொண்டர்களால் மனமகிழ்ச்சி ஏற்படும்.
பெண்களுக்கு நட்பு வட்டாரம் விரிவடையும். மாணவர்கள் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும், அளவோடு பழகுங்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பொருளாதாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். உறவினர்களிடம் பாசம் அதிகரிக்கும். பிரச்னைகளைப் பக்குவமாகக் கையாள்வீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு எதிர்பாராத வருவாய் கிடைக்கும். விவசாயிகளுக்கு பால் வியாபாரத்திலும் வருமானம் கூடும்.
அரசியல்வாதிகளுக்குக் கடந்தக் காலக் கசப்புகள் மறையும். கலைத் துறையினர் கலைப் பயணங்களை மேற்கொள்வீர்கள். பெண்களுக்குப் பணப் புழக்கம் கூடும். மாணவர்கள் ஆசிரியர்களைப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.