Indus River: ``சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்துவது ஓகே; நீரை எங்கு தேக்குவீர்...
டொவினோ தாமஸ், சேரன் நடித்த நரிவேட்டை டிரைலர்!
நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் உருவான நரிவேட்டை திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
‘இஷ்க்’ படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் அனுராஜ் மனோகர். இவர் கிரைம் திரில்லர் பாணியில் இயக்கியுள்ள திரைப்படம் நரிவேட்டை.
இதில், டொவினோ தாமஸ் நாயகனாகவும் நடிகர்கள் சுராஜ் வெஞ்சரமூடு, சேரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க: 25-வது மணநாளைக் கொண்டாடிய அஜித் - ஷாலினி!
இந்தியன் சினிமா கம்பெனி தயாரிப்பில் உருவான இப்படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர். மலைவாழ் மக்களுக்கு எதிராக காவல்துறையினர் மேற்கொள்ளும் அதிகாரத்தை கேள்வி கேட்கும்படியான காட்சிகள் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. இப்படம் மே 16 ஆம் தேதி திரையரங்களில் வெளியாகிறது.