செய்திகள் :

இன்று உங்க ராசிக்கு எப்படி?

post image

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.

ஏப்ரல் 25

மேஷம்:

கிரகநிலை:

தைரிய ஸ்தானத்தில் ராஹூ - களத்திர ஸ்தானத்தில் சந்திரன், புதன், செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன் - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன், குரு, சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். எடுத்த காரியத்தை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். எண்ணப்படி எல்லாம் நடக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். உங்களது செயல்களுக்கு தடை ஏற்படுத்தியவர்கள் தாமாகவே விலகி விடுவார்கள். பணவரத்து கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

ரிஷபம்:

கிரகநிலை:

குடும்ப ஸ்தானத்தில் ராஹூ - ரண, ருண ஸ்தானத்தில் சந்திரன், புதன், செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் சூர்யன் - அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன், குரு, சனி, கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று குடும்பத்தில் இருந்த மன வருத்தங்கள் மாறி சுமூகமான நிலை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். திருமண முயற்சி கைகூடும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். தொழில் போட்டிகள் உண்டாகலாம். அனுசரித்து செல்வது முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

மிதுனம்:

கிரகநிலை:

ராசியில் ராஹூ - பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன், புதன், செவ்வாய் - ரண, ருண ஸ்தானத்தில் சூர்யன் - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன், குரு, சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனை குறையும். எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும். விருப்பமானவர்களுடன் சந்திப்பு ஏற்படும். சாதக பாதகங்களை பற்றி கவலைப்படாமல் எந்த காரியத்தை யும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். போட்டிகள் குறையும். எதிலும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கடகம்:

கிரகநிலை:

சுக ஸ்தானத்தில் சந்திரன், புதன், செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன் - ரண, ருண ஸ்தானத்தில் சுக்ரன், குரு, சனி , கேது - அயன, சயன, போக ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று சின்ன விஷயங்களுக்கு கூட உங்களுக்கு கோபம் வரலாம். எனவே கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் காரியங்கள் சாதகமாக நடைபெறும். எதிர்பாராத பணத் தேவை உண்டாகும். அதனை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது..

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

சிம்மம்:

கிரகநிலை:

தைரிய ஸ்தானத்தில் சந்திரன், புதன், செவ்வாய் - சுக ஸ்தானத்தில் சூர்யன் - பஞ்சம ஸ்தானத்தில் சுக்ரன், குரு, சனி , கேது - லாப ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று எதிலும் இழுபறியான நிலை காணப்படும். அடுத்தவர்களால் தொல்லைகள் உண்டாகலாம் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் டென்ஷனும் வீண் அலைச்சலும் இருக்கும். வீண் பகை உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது. எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மன உறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். எதிர்ப்புகள் நீங்கும்

அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

கன்னி:

கிரகநிலை:

தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சந்திரன், புதன், செவ்வாய் - தைரிய, வீர்ய ஸ்தானத்தில் சூர்யன் - சுக ஸ்தானத்தில் சுக்ரன், குரு, சனி , கேது - தொழில் ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் தாமதம் ஏற்படலாம். பணவரத்து எதிர்பார்த்ததை விட குறையக் கூடும். கடன் விஷயங்களை தள்ளிபோடுவது நல்லது. புதிய நபர்களுக்கு பொருட்களை சப்ளை செய்யும்போது கவனம் தேவை. குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கி டையே ஒற்றுமை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

துலாம்:

கிரகநிலை:

ராசியில் சந்திரன், செவ்வாய், புதன் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சூர்யன் - தைரிய ஸ்தானத்தில் சுக்ரன், குரு, சனி , கேது - பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் இருப்பவர்களால் திடீர் டென்ஷன் உண்டாகலாம். கவனம் தேவை. பிள்ளைகளை அனுசரித்து செல்வது நல்லது. கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் காரியங்களை சாதகமாக செய்து முடிக்க முடியும். எதிர்பார்த்த தகவல் தாமதப்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

விருச்சிகம்:

கிரகநிலை:

ராசியில் சூர்யன் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன், குரு, சனி , கேது - அஷ்டம ஸ்தானத்தில் ராஹு- அயன, சயன, போக ஸ்தானத்தில் - சந்திரன், புதன், செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று உங்கள் பேச்சு திறமையால் காரிய வெற்றிகள் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சின்ன விஷயங்களால் மன நிறைவு உண்டாகும். மற்றவர்களால் அமைதியின்மை உண்டாகலாம். அடுத்தவர் பேச்சை கேட்பதை குறைப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

தனுசு:

கிரகநிலை:

ராசியில் சுக்ரன், குரு, சனி , கேது - களத்திர ஸ்தானத்தில் ராஹு - லாப ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய், புதன் - அயன, சயன, போக ஸ்தானத்தில் சூர்யன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கி விருத்தியடையும். பொருட்களை வெளியூருக்கு அனுப்பும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பார்க்கும் இடத்தில் கவனமுடன் பழகுவது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

மகரம்:

கிரகநிலை:

ரண, ருண , ஸ்தானத்தில் ராஹூ - தொழில் ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய், புதன் - லாப ஸ்தானத்தில் சூர்யன் - அயன, சயன, போக ஸ்தானத்தில் சுக்ரன், குரு, சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து பேசுவது நல்லது. எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. பேச்சு திறமையால் காரியங்களை எளிதாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். சின்ன விஷயங்கள் கூட மன நிறைவு தரும்படி நடக்கும். தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்ய முயற்சி மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

கும்பம்:

கிரகநிலை:

பஞ்சம ஸ்தானத்தில் ராஹூ - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய், புதன் - தொழில் ஸ்தானத்தில் சூர்யன் - லாப ஸ்தானத்தில் சுக்ரன், குரு, சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் அதிகரிக்கும். பணம் வருவது அதிகரிக்கும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும்.

தொழில் வியாபார சிக்கல்கள் நீங்கி நன்கு நடைபெறும். கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். பிள்ளைகளின் நடத்தை மனதுக்கு நிம்மதியை தரும்

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

மீனம்:

கிரகநிலை:

சுக ஸ்தானத்தில் ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய், புதன் - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன் - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன், குரு, சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் நன்மை உண்டாகும். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். துணிச்சலாக முயற்சிகள் மேற்கொண்டு வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். மேல் அதிகாரிகளால் நன்மை ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

டொவினோ தாமஸ், சேரன் நடித்த நரிவேட்டை டிரைலர்!

நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் உருவான நரிவேட்டை திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.‘இஷ்க்’ படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் அனுராஜ் மனோகர். இவர் கிரைம் திரில்லர் பாணியில் இயக்கியுள்ள திரைப்ப... மேலும் பார்க்க

ஆண்ட்ரீவா, நவாரோ முன்னேற்றம்

ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா, அமெரிக்காவின் எம்மா நவாரோ ஆகியோா் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினா். மகளிா் ஒற்றையா் பிரிவு 2-ஆவது சுற்றில், ப... மேலும் பார்க்க

சொந்த மண்ணில் பெங்களூருக்கு முதல் வெற்றி

இந்தியன் பிரீமியா் லீக் கிரிக்கெட் போட்டியின் 42-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு 11 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வியாழக்கிழமை தோற்கடித்தது. நடப்பு சீசனில் சொந்த மண்ணில் 4-ஆவது ஆ... மேலும் பார்க்க

பீனிக்ஸ் - வீழான் படத்தின் முக்கிய அறிவிப்பு!

நடிகர் விஜய் சேதுபதியின் மகன் அறிமுகமாகும் பீனிக்ஸ் - வீழான் படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் விஜய் சேதுபதி, மகாராஜா திரைபடத்தில்... மேலும் பார்க்க