செய்திகள் :

பஹல்காம் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்தவர் கைது!

post image

பஹல்காம் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்து சமூக ஊடகத்தில் விடியோ வெளியிட்டவர் கைது செய்யப்பட்டார்.

மேகாலயாவின் கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தில் சைமன் ஷில்லா என்பவர், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்து சமூக ஊடகத்தில் விடியோ வெளியிட்டது சர்ச்சையைக் கிளப்பியது.

இதனைத் தொடர்ந்து, அவரைக் கைது செய்த காவல்துறையினர், அவரது வீட்டையும், இரண்டு மொபைல் போன்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பயங்கரவாதத்துக்கு ஆதரவாகவும், ஒற்றுமையைச் சீர்குலைக்கும் வகையிலும் முகநூலில் சைமன் கருத்துகளைப் பதிவிட்டதால், கைது செய்யப்பட்டார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும், சைமன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருப்பதாகவும் தெரிவித்தனர்.

இதையும் படிக்க:பஹல்காம் தாக்குதல்: சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து தகர்ப்பு!

புணேவிலுள்ள பாகிஸ்தானியர்கள் 2 நாளுக்குள் வெளியேற உத்தரவு!

மகாராஷ்டிரத்தின் புணே மாவட்டத்திலுள்ள 111 பாகிஸ்தானியர்கள் 2 நாள்களுக்குள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப... மேலும் பார்க்க

பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம்; முதல்வர்களுக்கு அமித் ஷா அழைப்பு!

மாநிலங்களில் இருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேறுவதை மாநில முதல்வர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் செவ்வாய்க்கிழமையில் பயங... மேலும் பார்க்க

21ஆவது மாடியிலிருந்து 7 மாத குழந்தை தவறி விழுந்து பலி!

மகாராஷ்டிரத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஜன்னலை மூட முயன்றபோது, குழந்தை தவறி கீழே விழுந்து பலியான சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மகாராஷ்டிரத்தின் பால்கர் மாவட்டத்தில் விரார் ... மேலும் பார்க்க

'பயங்கரவாதம் வேண்டாம்; அமைதி வேண்டும்!' - ஜம்மு-காஷ்மீர் மாணவிகள் பேரணி!

ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து அனந்த்நாக் அரசுக் கல்லூரி மாணவிகள் பேரணி நடத்திய விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஜம்மு - காஷ்மீர் பஹல்காம் சுற்றுலாப் பகுதியில் கடந்த செவ்வாய... மேலும் பார்க்க

இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்

இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்.இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் (83) வயது மூப்பு காரணமாக காலமானார்.இவர், 1994 முதல் 2003 காலகட்டத்தில் இஸ்ரோவின் தலைவராகப் பதவி வகித்தார். ம... மேலும் பார்க்க

சாவர்க்கர் வழக்கில் ராகுலுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

சாவர்க்கர் குறித்து ராகுல் காந்தியின் கருத்துகளுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சுதந்திரப் போராட்ட வீரர் சாவர்க்கர் குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சர்ச்சையான கருத்து... மேலும் பார்க்க