செய்திகள் :

சாவர்க்கர் வழக்கில் ராகுலுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

post image

சாவர்க்கர் குறித்து ராகுல் காந்தியின் கருத்துகளுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சுதந்திரப் போராட்ட வீரர் சாவர்க்கர் குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சர்ச்சையான கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறி, அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், உச்ச நீதிமன்றம் தெரிவித்ததாவது, ராகுல் காந்தியின் கருத்துகள் கண்டிக்கத்தக்கது. எதிர்க்கட்சித் தலைவராக அவரது கருத்துகள் பொறுப்பற்றவையாகக் கொள்ளப்படுகிறது. இனிவரும் காலங்களில், இவ்வாறு சுதந்திரப் போராட்ட வீரர்களை கேலி செய்ய வேண்டாம். மகாத்மா காந்திகூட ஆங்கிலேயர்களைத் தொடர்புகொண்டபோது, உங்களின் விசுவாசமான ஊழியர் என்று குறிப்பிட்டது, ராகுல் காந்திக்கு தெரியுமா? அவர்கள் நமக்கு சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்தனர்; ஆனால், அவர்கள் மீது நீங்கள் இவ்வாறான கருத்துகளைக் கூறுகிறீர்கள்.

மகாராஷ்டிர மாநிலம், அலோகாவில் கடந்த 2023ஆம் ஆண்டில், பாரத் ஜோடோ நடைப்பயணத்தின்போது செய்தியாளர்களுடன் பேசும்போது சாவர்க்கர் குறித்து ராகுல் காந்தி அவதூறு கருத்து தெரிவித்ததாக லக்னெள மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

மகாத்மா காந்தி, ஜவாஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல் போன்றோர் சிறையில் வாடியிருந்தபோது, சாவர்க்கர் மட்டும் ஆங்கிலேயர்களுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதியதாகவும், முஸ்லிம் நபர் ஒருவரை சாவர்க்கர் தாக்கியதாக சாவர்க்கரின் புத்தகத்திலேயே குறிப்பிட்டதாக ராகுல் காந்தி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ராகுல் காந்தியின் இந்தக் கருத்துகள் பாஜக உள்பட பல்வேறு தரப்பினரிடையே கண்டனங்களை எழுப்பியது.

இதனையடுத்து, தன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்யுமாறு அலாகாபாத் நீதிமன்றத்தில் ராகுல் மனு அளித்தார். இருப்பினும், அவரது மனுவை அலாகாபாத் நீதிமன்றம் நிராகரித்தது. இதனைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி வழக்கு தொடர்ந்தார். தன் மீதான அவதூறான சர்ச்சைக்குரிய நடவடிக்கைகள், மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக சுதந்திரமாகக் கடமையைச் செய்ய தடையாக இருப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவானது, நீதிபதிகள் தீபங்கர் தத்தா, மன்மோகன் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்னிலையில், இன்று விசாரணைக்கு வந்த நிலையில், ராகுல் காந்தி மீதான அலாகாபாத் நீதிமன்றத்தின் குற்றவியல் நடவடிக்கைகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இதையும் படிக்க:பந்திபோராவில் பயங்கரவாதி அல்தாஃப் லல்லியை சுட்டுக் கொன்றது இந்திய ராணுவம்!

புணேவிலுள்ள பாகிஸ்தானியர்கள் 2 நாளுக்குள் வெளியேற உத்தரவு!

மகாராஷ்டிரத்தின் புணே மாவட்டத்திலுள்ள 111 பாகிஸ்தானியர்கள் 2 நாள்களுக்குள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப... மேலும் பார்க்க

பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம்; முதல்வர்களுக்கு அமித் ஷா அழைப்பு!

மாநிலங்களில் இருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேறுவதை மாநில முதல்வர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் செவ்வாய்க்கிழமையில் பயங... மேலும் பார்க்க

21ஆவது மாடியிலிருந்து 7 மாத குழந்தை தவறி விழுந்து பலி!

மகாராஷ்டிரத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஜன்னலை மூட முயன்றபோது, குழந்தை தவறி கீழே விழுந்து பலியான சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மகாராஷ்டிரத்தின் பால்கர் மாவட்டத்தில் விரார் ... மேலும் பார்க்க

'பயங்கரவாதம் வேண்டாம்; அமைதி வேண்டும்!' - ஜம்மு-காஷ்மீர் மாணவிகள் பேரணி!

ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து அனந்த்நாக் அரசுக் கல்லூரி மாணவிகள் பேரணி நடத்திய விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஜம்மு - காஷ்மீர் பஹல்காம் சுற்றுலாப் பகுதியில் கடந்த செவ்வாய... மேலும் பார்க்க

இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்

இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்.இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் (83) வயது மூப்பு காரணமாக காலமானார்.இவர், 1994 முதல் 2003 காலகட்டத்தில் இஸ்ரோவின் தலைவராகப் பதவி வகித்தார். ம... மேலும் பார்க்க

பந்திபோராவில் பயங்கரவாதி அல்தாஃப் லல்லியை சுட்டுக் கொன்றது இந்திய ராணுவம்!

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்து வரும் துப்பாக்கிச் சண்டையில் லஷ்கர்-இ-தொய்பாவின் தளபதிகளில் ஒருவரான அ... மேலும் பார்க்க