400-ஆவது டி20 போட்டியில் எம்.எஸ்.தோனி!
சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி 400-ஆவது டி20 போட்டியில் களமிறங்குகிறார்.
இந்த ஐபிஎல் சீசனில் ருதுராஜ் காயம் காரணமாக தொடரிலிருந்து வெளியேற எம்.எஸ்.தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இதுவரை 399 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள தோனி 7,566 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 28 அரைசதங்களுடன் 527 பவுண்டரிகள், 346 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.
சென்னையில் சேப்பாக்கம் திடலில் இன்றிரவு (ஏப்.25) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போட்டியில் தனது 400-ஆவது டி20 போட்டியில் விளையாட இருக்கிறார்.
இதற்கு முன்பாக இந்தியாவின் சார்பில் ரோஹித் சர்மா (456), விராட் கோலி (407), தினேஷ் கார்த்திக் (412) 400க்கும் அதிகமான டி20 போட்டிகளில் விளையாடியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
சர்வதேச போட்டிகளில் ஓய்வுபெற்ற தோனி ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார்.
சிஎஸ்கே அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. இந்தப் போட்டியிலாவது வெல்வார்களா என சிஎஸ்கே ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.