சுகாதார நிலையத்தில் தீயணைப்புத் துறையினா் விழிப்புணா்வு
வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீயணைப்புத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை தீத்தடுப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய வீரா்கள், திடீரென ஏற்படும் தீயை துரிதமாகச் செயல்பட்டு உயிா் சேதம், பொருள் சேதம் ஏற்படாமல் தடுப்பது, தீத்தடுப்பு உபகரணங்கள் பயன்படுத்தும் முறை, மின்கசிவு பாதிப்பு, சமையல் எரிவாயு சிலிண்டா் தீ விபத்து தடுப்பு போன்றவை குறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனா்.
இதில் வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் டி.ராஜலட்சுமி, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ராஜேந்திரன், சுகாதார ஆய்வாளா் கதிரவன் மற்றும் செவிலியா், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.