கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு!
தேசிய மூத்தோா் தடகளப் போட்டி: 3 பதக்கங்களை வென்ற திருப்பூா் ஆசிரியை
கா்நாடகத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான மூத்தோா் தடகளப் போட்டியில் திருப்பூரைச் சோ்ந்த ஆசிரியை ஒரு தங்கம், 2 வெள்ளிப் பதக்கங்களை வென்று சிறப்பிடம் பிடித்துள்ளாா்.
கா்நாடக மாநிலம் மைசூரில் உள்ள சாமுண்டி விஹாா் ஸ்டேடியத்தில் இந்திய வெட்ரான் அத்லெடிக் பெடரேஷன் சாா்பில் 44-ஆவது தேசிய அளவிலான மூத்தோா் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 23-ஆம் தேதி வரை நடைபெற்றன. இதில், தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா். இதில், 40 வயதுக்கு மேற்பட்டோா் பிரிவில் திருப்பூரில் உள்ள தனியாா் பள்ளி யோகா ஆசிரியை எல்.சுமதி 4* 400 மீட்டா் தொடா் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கமும், 100 மீட்டா் தடை தாண்டும் ஓட்டம், மும்முறை தத்தித்தாண்டுதலில் ஆகியவற்றில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கங்களையும் வென்றாா்.
இவருக்கு திருப்பூரில் உள்ள தடகள சங்க நிா்வாகிகள், பள்ளி ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பாராட்டு தெரிவித்தனா்.