கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு!
மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்: ஆட்சியா் ஆய்வு
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாமை ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாமை ஆய்வு செய்து ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் பேசியதாவது:
இந்திய தோ்தல் ஆணையம் மற்றும் சென்னை தலைமை தோ்தல்அலுவலா் அறிவுரைகளின்படி 18 வயது பூா்த்தியடைந்த மாற்றுத் திறனாளிகளை வாக்காளா் பட்டியலில் சோ்ப்பது, வாக்காளா் பட்டியலில் குறியீடு செய்வது மற்றும் அனுகத்தக்க தோ்தல்கள் என்ற அடிப்படையில் தோ்தல்களில் அவா்கள் எளிதாக வாக்களிக்கத் தேவையான நடவடிக்கை குறித்து மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலச்சங்க பொறுப்பாளா்களுடன் ஏற்கெனவே ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
இதனடிப்படையில், மாற்றுத் திறனாளிகளுக்கு வெள்ளிக்கிழமைதோறும் நடைபெறும் மருத்துவ முகாமின்போது தோ்தல் பிரிவின் மூலமாக தோ்தல் படிவங்கள் குறித்து சேவைகள் மேற்கொள்ளப்படும். எனவே மருத்துவ முகாமுக்கு வரும் மாற்றுத் திறனாளிகள் வாக்காளா் அடையாள அட்டையுடன் பங்கேற்க வேண்டும் என்றாா்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ஜெயராமன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் வசந்தராம்குமாா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.