விஜய் வருகை: கோவை விமான நிலையத்தில் திரண்ட தவெக தொண்டர்கள்!
தவெக பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்க வரும் விஜயை வரவேற்க கோவை விமான நிலையத்தில் தவெக தொண்டர்கள் திரண்டுள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி நிர்வாகிகள் கருத்தரங்கு கோவையில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இரண்டு நாள்கள் நடைபெறும் கருத்தரங்கில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கிறார். மேலும், கோவையில் பேரணி நடத்தவும் விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து கோவை செல்வதற்காக கட்சியின் தலைவர் விஜய், சென்னை நீலாங்கரை இல்லத்தில் இருந்து விமான நிலையம் புறப்பட்டார்.
தவெக தலைவர் விஜய் வருவதையொட்டி கோவை விமான நிலையத்தில் தொண்டர்கள் குவிந்துள்ளனர்.
இதையும் படிக்க | சேலம் பட்டாசு விபத்தில் இறந்தோருக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி! - முதல்வர் அறிவிப்பு