செய்திகள் :

போப் பிரான்சிஸ் உடலுக்கு இறுதிச் சடங்கு; வாடிக்கனுக்கு வெளியே நல்லடக்கம் - முழுத் தகவல்

post image

மறைந்த போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு இன்று காலைதொடங்கி நடைபெற்றுவருகிறது.

கத்தோலிக்க கிறிஸ்துவ மத தலைவரான போப் பிரான்சிஸ் ஏப்ரல் 21 ஆம் தேதி தனது 88 ஆவது வயதில் மறைந்தார். இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்ட நிலையில் உயிரிழந்தார்.

அவரது உடல் அஞ்சலிக்காக காசா சாண்டா மார்ட்டாவின் தேவாலயத்திலிருந்து புனித பீட்டர்ஸ் பேராலயத்துக்கு புதன்கிழமை கொண்டு செல்லப்பட்டது.

போப் பிரான்சிஸின் உடல் புனித பீட்டர்ஸ் பேராலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி ஆகியோர் பீட்டர்ஸ் பேராலயத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினர். உலக தலைவர்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

கார்டினல்கள், பேராயர்கள், ஆயர்கள் மற்றும் பாதிரியார்கள் முன்னிலையில் இறுதிச் சடங்குப் பிரார்த்தனை நடைபெறுகிறது. இதற்கு கார்டினல்ஸ் கல்லூரியின் டீன் கார்டினல் ஜியோவானி பாட்டிஸ்டா ரே தலைமை தாங்குகிறார்.

திருப்பலி முடிந்து, சவப்பெட்டி பிரான்சிஸ் அடக்கம் செய்யப்படும் ரோம் பசிலிக்காவான சாண்டா மரியா மாகியோர்க்கு புறப்படுகிறது. இந்த ஊர்வலம் நகர வீதிகளில் சுமார் நான்கு கிலோமீட்டர் தூரம் செல்லப்படுகிறது.

வாடிகனுக்கு வெளியே உள்ள புனித மேரி மேஜர் பசலிக்கா பேராலயத்தில் போப் பிரான்சிஸ் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. அவரின் விருப்பப்படியே அவருக்கும் மிகவும் பிடித்தமான புனித மேரி பசிலிக்காவில் அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இதற்காக அப்பேராலயத்தில் அவர் அடிக்கடி பிரார்த்தனை செய்யும் புனித மேரியின் படத்துக்கு அருகே எளிய முறையில் கல்லறை ஒன்று தயாராகி இருக்கிறது.

இறுதி ஊர்வலத்தைப் பின்தொடர முடியாது, ஆனால் பொதுமக்கள் பாதையில் அமைக்கப்பட்டுள்ள உலோகத் தடைகளுக்குப் பின்னால் இருந்து ஊர்வலத்தை பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

`மியான்மரில் மீண்டும் அது நடக்கும்..!’ - மக்களை பீதியடைய செய்த ஜோதிடர் கைது

மியான்மரில் பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், மீண்டும் இதே போன்று மற்றொரு நிலநடுக்கம் ஏற்படும் என்று கூறி மக்களை பீதியடைய செய்ததாக ஜோதிடர் ஒருவர் கைது செ... மேலும் பார்க்க

"கடைக்காரரிடம் மதத்தைக் கேட்டு இந்துக்கள் பொருட்கள் வாங்க வேண்டும்" - பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு

காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு உலகம் முழுவதும் கண்டனம் எழுந்துள்ளது.இத்தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து பாஜக-வைச் சேர்ந்த மகாராஷ்டிரா மீன்வளத்துற... மேலும் பார்க்க

China: அழகைக் கூட்ட 100 அறுவை சிகிச்சை; சீன பெண் செலவளித்த தொகை எவ்வளவு தெரியுமா?

சீனாவைச் சேர்ந்த இளம் பெண், தன்னை அழகாக காண்பித்துக் கொள்ள 100க்கும் மேலான அறுவை சிகிச்சைகளைச் செய்து கொண்டுள்ளார்.சாதாரணமாகவே பெண்கள் தங்களை அழகாக காண்பித்துக் கொள்ள பல விஷயங்களைச் செய்கின்றனர். கிரா... மேலும் பார்க்க

`முன்னாள் காதலியின் நினைவு வந்தது’ - DJவின் ஒரு பாடலால் திருமணத்தை நிறுத்திய மணமகன் - என்ன நடந்தது?

திருமணத்தில் ஒலிக்கப்பட்ட பாடலால், முன்னாள் காதலின் நினைவு வந்து மணமகன் ஒருவர் திருமணத்தை நிறுத்தியுள்ளார். இன்றைக்கு நடைபெறும் திருமணங்களில், அந்த நாளை மறக்க முடியாததாக மாற்ற குடும்பத்தினர் பல விஷயங்... மேலும் பார்க்க

`பேபி, அவர் நமக்கு மகளாக பிறப்பார்' - ஜாக்குலின் தாயார் பெயரில் கார்டனை கிஃப்ட் கொடுத்த சுகேஷ்

டெல்லியில் தொழிலதிபர் மனைவியை மிரட்டி ரூ.200 கோடி அளவுக்கு மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். சுகேஷ் தான் மிரட்டி மற்றும் மோசடி செய்து சம... மேலும் பார்க்க

தினமும் விமானத்தில் கல்லூரிக்குச் செல்லும் பாப் பாடகி - ஒரு நாளுக்கு எவ்வளவு செலவிடுகிறார் தெரியுமா?

தினமும் கிட்டத் தட்ட 20,000 ரூபாய் செலவு செய்து விமானத்தில் கல்லூரிக்கு சென்று வருகிறார் ஜப்பானை சேர்ந்த பாப் சிங்கர்.பள்ளி அல்லது கல்லூரிக்கு செல்லும் பயணத்தை மாணவர்கள் தூரம், வசதி, விலைப் பொறுத்து த... மேலும் பார்க்க