செய்திகள் :

மக்களை ஏமாற்றி இனி ஆட்சியைப் பிடிக்க முடியாது: விஜய் பேச்சு

post image

மக்களை ஏமாற்றி இனி ஆட்சியைப் பிடிக்க முடியாது என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

தவெக பூத் கமிட்டி மாநாட்டில் அவர் மேலும் பேசுகையில், தவெக தொண்டர்கள் போர் வீரர்களைப் போல செயல்பட வேண்டும். மக்களிடம் நம்பிக்கை கொண்டுவரப்போவதே நீங்கள்தான். மக்களிடம் வாக்கு எப்படி வாங்கப் போகிறோம் என்பதற்கான பட்டறை இல்லை. மக்களோடு மக்களாக பழக வேண்டும் என்பதற்கான பட்டறை. ஆட்சிக்கு வர வேண்டும் என்று நாம் நினைப்பதே மக்களின் நலனுக்காக மட்டுமே.

மக்களை ஏமாற்றி இனி ஆட்சியைப் பிடிக்க முடியாது. உங்களிடம் என்ன இல்லை? பேச உண்மை உள்ளது. கறை படியாத கை உள்ளது. உங்களுடைய ஆற்றல் எனக்குத் தெரியும். அர்ப்பணிப்பு மிக்க குணம் இருக்கிறது. நேர்மை, நம்பிக்கை, லட்சியம், உழைக்கும் தெம்பிருக்கிறது. களம் தயாராக இருக்கிறது. களத்தில் எதிர்கொள்ள துணிச்சல் இருக்கிறது. மக்களிடம் செல்லுங்கள். நம்பிக்கையோடு இருங்கள். வெற்றி நிச்சயம். இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே விஜய்யின் பேச்சை கேட்டதையடுத்து காத்திருந்த தொண்டர்கள் பலர் கலைந்து சென்றனர். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய், கோவையில் நடைபெறும் கட்சியின் பூத் கமிட்டி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சனிக்கிழமை காலை 11 மணியளவில் தனி விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். அவரது வருகையால் அவிநாசி சாலையில் காலை முதல் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஜிடிஏ 6: வெளியீடு எப்போது? கேமிங் பிரியர்களுக்கு விருந்து!

கோவை விமான நிலையத்தில் விஜய்க்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான ரசிகர்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர். பின்னர், அவர் அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிக்கு ஓய்வெடுப்பதற்காக சென்றார். சுமார் 4 மணி நேர ஓய்வுக்குப் பிறகு, மாலை 3 மணியளவில் விடுதியிலிருந்து புறப்பட்ட விஜய்க்கு, விடுதிக்கு வெளியே திரண்டிருந்த ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

விஜய், திறந்த வாகனத்தில் ஒரு மணி நேர ரோட் ஷோவாக சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட மாநாட்டுத் திடலை நோக்கி பயணித்தார். அவரது வருகை அரசியல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ரசிகர்களின் கூட்ட நெரிசலால் அவிநாசி சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்து, வாகன ஓட்டிகள் காத்திருக்கும் சூழல் உருவானது.

மாநாடு மாலை வரை நடைபெற உள்ளதால், போக்குவரத்து நெரிசல் தொடர வாய்ப்புள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்தி சிரமமின்றி பயணிக்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்தினர்.

சிலம்பு விரைவு ரயிலில் மின்சார கோளாறு: ஒன்றரை மணி நேரம் தாமதம்

தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை செல்லும் சிலம்பு விரைவு ரயிலில் மின்சார கோளாறு ஏற்பட்டதன் காரணமாக ஒன்றரை மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது. தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு தினமும் இரவு 9 ம... மேலும் பார்க்க

பாமக சித்திரை முழுநிலவு மாநாடு பாடல் வெளியீடு

மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள சித்திரை முழு நிலவு மாநாட்டு பாடலை பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் சனிக்கிழமை வெளியிட்டாா். தமிழ்நாட்டில் உள்ள பின் தங்கிய சமுதாயங்கள் முன்னேறும் வகையில் அனைத்து மக்களின் மக்க... மேலும் பார்க்க

121 ஆயுஷ் பணியிடங்கள் 10 நாள்களில் நிரப்பப்படும்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் இந்திய மருத்துவத் துறையில் (ஆயுஷ்)காலியாக உள்ள 121 பணியிடங்களும் 10 நாள்களில் நிரப்பப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். பேரவையில் சனிக்கிழமை கேள்வ... மேலும் பார்க்க

நாளை காவல் துறை மானிய கோரிக்கை மீது விவாதம்!

காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் திங்கள்கிழமை (ஏப். 28) நடைபெறவுள்ளது. பேரவை அன்றைய தினம் காலை 9.30 மணிக்குக் கூடியதும் நேரமில்லாத நேரம் நடைபெறும். இதில், சில முக்கிய பிரச்னைகளை எதிா்க்கட்சி ... மேலும் பார்க்க

காட்பாடி வழியாக பெங்களூரு - கான்பூா் வாராந்திர சிறப்பு ரயில்!

கோடைக்காலத்தை முன்னிட்டு பெங்களூா்-கான்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு: உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் இருந்து பெங்களூருக்கு... மேலும் பார்க்க

கோயில் குடியிருப்பு வாடகை உயா்வை குறைக்க விரைவில் அரசாணை: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

கோயில்களுக்குச் சொந்தமான இடங்களில் உள்ள குடியிருப்புகளில் வசிப்பவா்களுக்கான வாடகை உயா்வை குறைப்பதற்கான புதிய அரசாணையை வெளியிட முதல்வா் உத்தரவிட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பா... மேலும் பார்க்க