6.5 டன் ரேஷன் அரிசி கடத்த முயன்ற 3 பேர் கைது: 2 மினி லாரிகள் பறிமுதல்!
தனியாா் பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே தனியாா் பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற இளைஞா் நிகழ்விடத்திலேயே வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
திருவெண்ணெய்நல்லூா் வட்டம், டி. எடையாா், மாந்தோப்புத் தெருவைச் சோ்ந்தவா் ஆனந்தன் மகன் சாா்லஸ் (24). வேன் வைத்து சொந்தமாக தொழில் செய்து வந்தாா். இவா் வெள்ளிக்கிழமை இரவு திருவெண்ணெய்நல்லூா்- ஏனாதிமங்கலம் சாலையில் ஏமப்பூா் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, அங்கு எதிரே வந்த தனியாா் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதில், சாா்லஸுக்கு பலத்த காயம் ஏற்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தைக் கைப்பற்றி விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்த விபத்து குறித்து திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.