செய்திகள் :

மும்பை: அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் திடீர் தீவிபத்து; முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பல்..!

post image

மும்பை தென்பகுதியில் இருக்கும் பெல்லார்ட் எஸ்டேட்டில் அமலாக்கப்பிரிவின் அலுவலகம் இருக்கிறது. இந்த அலுலகத்தில் இன்று அதிகாலை 3 மணிக்கு திடீரென தீப்பிடித்துக்கொண்டது.

அமலாக்கப் பிரிவு அலுவலக கட்டிடத்தின் 4-வது மாடியில் தீப்பற்றிக்கொண்டது குறித்து கேள்விப்பட்டதும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தீ

8 தீயணைப்பு வாகனங்கள், 6 டேங்கர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை பல மணி நேரம் போராடி அணைத்தனர்.

இத்தீவிபத்து நான்காவது மாடியோடு கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாக மாநகராட்சி தீயணைப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீவிபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. ஆனால் தீவிபத்தில் வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமாகிவிட்டதாக அமலாக்கப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன.

மும்பையில் தொடர்ந்து தீ விபத்து

மும்பையில் சமீப காலமாக தொடர்ந்து தீவிபத்துகள் அதிக அளவில் நடந்து வருகிறது. மும்பை அந்தேரி லோகண்ட்வாலாவில் உள்ள 7 மாடி கட்டிடத்தில் நேற்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது.

முதல் மாடியில் இருந்த வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் அபினா (34) என்ற பெண் புகையில் சிக்கி மூச்சுவிட முடியாமல் இறந்து போனார். இது தவிர அவர்களது வீட்டில் இருந்த இரண்டு வளர்ப்பு நாய்களும் மூச்சுத்திணறி உயிரிழந்தன.

கணவருடன் அபினா

மேலும் அபினாவின் கணவர் கார்த்திக் காயம் அடைந்து அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். 10 நாள் குழந்தை, 3 வயது குழந்தை உள்பட 6 பேர் தீவிபத்தில் சிக்கி மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அபினாவும், அவரது குடும்பத்தினரும் 6-வது மாடியில் தான் வசித்து வருகின்றனர். தீ விபத்து ஏற்பட்டபோது அவர்கள் வளர்த்த நாயுடன் மேல் மாடிக்கு செல்ல அபினா திட்டமிட்டார். ஆனால் அவர்களது நாய்கள்தான் அபினாவை படிக்கட்டுகள் வழியாக வரும்படி இழுத்து வந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். சமீபத்தில் லோகண்ட்வாலாவில் நடந்த 6-வது தீவிபத்தாகும்.

கோத்தகிரி: குறைமாத குட்டி ஈன்று இறந்து கிடந்த தாய் யானை.. என்ன காரணம்? - குழப்பத்தில் வனத்துறை

நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி அருகில் உள்ள நட்டக்கல் பகுதியயைச் சேர்ந்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சிலர் வழக்கமாக தேயிலை பறிக்கும் பணிக்கு நேற்று காலை சென்றிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட வனப்பகுதியில்... மேலும் பார்க்க

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 3 பெண் தொழிலாளர்கள் பலி; 7 பேர் காயம்

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் 3 பெண் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 7 பேர் காயமடைந்தனர். சிவகாசி சிறுகுளம் காலணியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் (வயது 57) மற்றும் பூத்தாயம்... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: அரசு மருத்துவமனை மகப்பேறு வார்டில் தீ விபத்து; கர்ப்பிணிகள் மீட்பு; கொதிக்கும் மக்கள்

தஞ்சாவூரின் மையப் பகுதியான பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது அரசு இராசா மிராசுதார் மருத்துவமனை.பழமையான இந்த மருத்துவமனையில் மகப்பேறு, அவசரக் கால அறுவை சிகிச்சை, குழந்தைகள் நலம், கண் சிகிச்சை, ச... மேலும் பார்க்க

தண்டவாளத்தில் அமர்ந்த தந்தையைக் காப்பாற்ற முயன்ற மகள்; பெரியப்பாவுடன் ரயில் மோதி இறந்த பரிதாபம்!

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் அருகில் உள்ள ஜெகத்புரா பகுதியில் வாடகை வீட்டில் வசிக்கும் சுமித், குடும்ப பிரச்னையில் தனது மனைவியுடன் சண்டை போட்டுக்கொண்டு தற்கொலை செய்வதற்காக புறப்பட்டுச் சென்றார். அவர்... மேலும் பார்க்க

கரூரில் தொடர்ந்து சதமடித்த வெயில்... வெப்பத்தால் பற்றி எரிந்ததா கார்?

கரூரிலிருந்து பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை 24 மணி நேரமும் மிகவும் பரபரப்பாக காணப்படும் தேசிய நெடுஞ்சாலையாக உள்ளது. இந்த சாலையில் தினமும் பல ஆயிரம் வாகனங்கள் சென்றுக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில... மேலும் பார்க்க

கடலூர், கள்ளக்குறிச்சி: ஏரி, ஓடையில் குளிக்கச் சென்ற 5 சிறுவர், சிறுமியர் நீரில் மூழ்கி பலியான சோகம்

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் அருகில் இருக்கிறது வடக்கு கொளக்குடி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த உபையதுல்லா (9), முகமது ஹபில் (10), ஷேக் அப்துல் ரகுமான் (13) போன்றவர்கள் நண்பர்கள். இவர்கள் ம... மேலும் பார்க்க