சென்னை காவல் துறைக்கு 4 மாதங்களில் 69,000 அவசர அழைப்புகள்! மாநகர காவல் துறை
பிரச்னைகளைவிட பிரசாரத்துக்கு முன்னுரிமை அளிக்கும் பாஜக: சமாஜவாதி
பஹல்காம் தாக்குதலுக்கு, பாஜக அரசின் இயலாமைதான் காரணம் என்று சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து, பாஜக அரசின் மீது குற்றம் சாட்டிய சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்ததாவது, முக்கியமான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதைவிட, பிரசாரத்துக்குத்தான் பாஜக அரசு முன்னுரிமை அளிக்கிறது. நாட்டுக்குள் எவ்வாறு பயங்கரவாதிகள் நுழைந்தனர் என்பதுதான் கேள்வி. இது அரசின் தோல்வி; உளவுத் துறையின் தோல்வி.
முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை. பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு ரூ. 10 கோடி நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்பட வேண்டும்.
நாட்டில் வேலைவாய்ப்புகள் குறைந்து வருவதால், மக்கள் தங்கள் தகுதிக்குரிய வேலையினைப் பெற முடியவில்லை. அரசால் வேலைவாய்ப்புகள் வழங்க முடியாததால், பட்டம் பெற்றவர்கள், தொழில்கல்வி படித்தவர்கள் என இளைஞர்கள் பலரும் டெலிவரி ஊழியர்களாக மாறுகின்றனர்.
வேலைவாய்ப்பு வழங்கவில்லை என்றால், இடஒதுக்கீடும் வழங்கப்படவில்லை என்றுதான் பொருள். கல்வியில் நிறைய அரசியல் தலையீடுகள் நடந்து வருகின்றன.
அதிகாரிகளின் மூலம் தவறான செயல்களை அரசு செய்து வருகிறது. ஊழல் செய்யும் அதிகாரிகளும் முதல்வரின் வீட்டில் ஒளிந்து கொள்கின்றனர் என்று கூறினார்.
இதையும் படிக்க:எல்லையில் போர் பதற்றம்: 130 அணு ஆயுதங்கள் தயார் - பாகிஸ்தான் அமைச்சர் சர்ச்சை பேச்சு