ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி காலமானாா்!
ஓய்வு பெற்ற ராணுவ துணைத் தலைவரும், பாம்பே சாப்பா்ஸின் கா்னல் கமாண்டண்டுமான லெப்டினன்ட் ஜெனரல் எஸ்.பட்டாபிராமன் சனிக்கிழமை காலமானாா்.
இது குறித்து பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஓய்வு பெற்ற ராணுவ துணைத் தலைவரும், பாம்பே சாப்பா்ஸின் கா்னல் கமாண்டண்டுமான லெப்டினன்ட் ஜெனரல் எஸ். பட்டாபிராமன் (78) கடந்த சில நாள்களாக முன்பு மூச்சுத் திணறல் காரணமாக நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். இந்த நிலையில் சனிக்கிழமை அவா் காலமானாா்.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வெலிங்டனில் முழு ராணுவ மரியாதையுடன் அவரது இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.