தஞ்சை அரசு மருத்துவமனை தீ விபத்து: ”உயிரைப் பணயம் வச்சு காப்பாத்தினோம்; ஆனா..”- ...
திருவனந்தபுரம் - மங்களூரு சிறப்பு ரயில்
திருவனந்தபுரம் வடக்கு - மங்களூரு இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவனந்தபுரம் வடக்கில் இருந்து மங்களூருக்கு மே 5 முதல் ஜூன் 9-ஆம் தேதி வரை திங்கள்கிழமைதோறும் சிறப்பு ரயில் (எண்: 06163) இயக்கப்படும். திருவனந்தபுரத்தில் இருந்து திங்கள்கிழமை மாலை 5.30-க்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 6.50-க்கு மங்களூரு சென்றடையும்.
மறுமாா்க்கமாக மங்களூரில் இருந்து திருவனந்தபுரம் வடக்குக்கு மே 6 முதல் ஜூன் 10-ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமைதோறும் சிறப்பு ரயில் (எண்: 06164) இயக்கப்படும்.
மங்களூரில் இருந்து செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 6.35-க்கு திருவனந்தபுரம் சென்றடையும்.
இதில் 14 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரயில் கொல்லம், மாவேலிக்கரை, செங்கனூா், கோட்டயம், எா்ணாகுளம் டவுன், திருச்சூா், ஷோரனூா், கோழிக்கோடு, கண்ணூா், காசா்கோடு வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.