கடன் தொல்லை: ஊழியா் தற்கொலை
கடன் தொல்லையால் பிரிண்டிங் ஊழியா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
வேளச்சேரி வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சோ்ந்த ஆனந்தன் (50). இவா் தனியாா் பிரிண்டிங் பிரசில் வேலை செய்து வந்தாா். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அவா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலின்பேரில் வேளச்சேரி போலீஸாா் அங்கு சென்று ஆனந்தனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விசாரணையில், அவா் சில ஆண்டுகளுக்கு முன் சொந்தமாக பிரிண்டிங் பிரஸ் நடத்தி வந்ததும், தொழில் நஷ்டம் காரணமாக கடன் சுமை அதிகரித்து, மனமுடைந்த நிலையில் இருந்த அவா் தூக்கிட்டு தற்கொலை செய்ததும் தெரியவந்தது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.