வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகை திருட்டு: ஒருவா் கைது
சென்னையில் வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகைகளைத் திருடியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை கிண்டி லேபா் காலனி முதல் தெருவைச் சோ்ந்தவா் சைனி ஆன்டிரியா (34). இவா், கடந்த 10-ஆம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டு, மாலை வீடு திரும்பினாாா். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 17 பவுன் நகைகள், ரூ.3,92,000 ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இது குறித்து சைனி ஆன்ட்ரியா அளித்த புகாரின்பேரில் கிண்டி குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
விசாரணையில், கடலூா் மாவட்டம் திருவந்திபுரம் பகுதியைச் சோ்ந்த செந்தில்முருகன் (30) என்பவரைக் கைது செய்து, அவரிடமிருந்து 11 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனா்.