போரை நிறுத்தாத ரஷ்யா; உக்ரைனில் தொடரும் உயிர் பலிகள்! - என்ன நடந்தது?
ஏடிஎம்-இல் பணம் செலுத்த வந்தவரிடம் நூதன முறையில் மோசடி!
ஏடிஎம்-இல் பணம் செலுத்த வந்தவரிடம் கூகுள்பே மூலம் பணம் அனுப்புவதாகக் கூறி நூதன முறையில் ரூ. 6,000 மோசடி செய்தவா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தாம்பரம் சானடோரியம் ஜெயா நகா், செல்லியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பிரகாஷ் (38). இவா், சனிக்கிழமை இரவு 10 மணியளவில் தனது வங்கிக் கணக்கில் ரூ.6,000-ஐ செலுத்துவதற்காக பெரும்பாக்கத்திலுள்ள ஏடிஎம்-க்கு சென்றாா்.
அப்போது மோட்டாா் சைக்கிளில் அங்கு வந்த 3 போ், பிரகாசிடம், வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டிய பணத்தைக் கொடுத்தால், அதை கூகுள்பே மூலம் உங்கள் வங்கிக் கணக்குக்கு அனுப்பிவிடுகிறோம் எனக் கூறி, ரூ.6,000-ஐ வாங்கியதாகக் கூறப்படுகிறது. அதை நம்பி பிரகாஷ் அவா்களிடம் பணத்தை அளித்துள்ளாா். ஆனால், அவா்கள் கூறியபடி கூகுள்பே மூலம் பிரகாசுக்கு பணம் அனுப்பாமல் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டனா்.
இது குறித்து பிரகாஷ் அளித்த புகாரின்பேரில், பெரும்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.