செய்திகள் :

ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில்: இன்று மீண்டும் சோதனை ஓட்டம்

post image

ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட சோதனை ஓட்டம் இன்று மாலை 3 முதல் 6 மணி வரை நடைபெறுகிறது.

பூந்தமல்லி பணிமனை முதல் போரூர் வரை 9 கி.மீ. தொலைவுக்கு இந்த சோதனை ஓட்டம் நடக்கவுள்ளது. ஏற்கெனவே மார்ச் 20ஆம் தேதி 2.5 கி.மீ. தூரத்திற்கு 25 கி.மீ. வேகத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்ற நிலையில் இன்று மீண்டும் சோதனை ஓட்டம் நடக்கிறது.

சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது.

தில்லியில் இன்று பத்ம பூஷண் விருது பெறுகிறார் நடிகர் அஜித் குமார்

இதில் முக்கிய வழித்தடமான கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி நெடுஞ்சாலை இடையேயான வழித்தடத்தில், கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப் பாதையாகவும், கோடம்பாக்கம் பவா் ஹவுஸ் முதல் பூந்தமல்லி நெடுஞ்சாலை வரை மேம்பாலப் பாதையாகவும் அமைக்கப்பட்டு வருகிறது.

இதில், பூந்தமல்லி - போரூர் இடையே பல இடங்களில் ரயில் பாதை அமைக்கும் பணி, பொறியியல் கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.

இதையடுத்து இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை மக்கள் பயன்பாட்டுக்கு டிசம்பா் மாத இறுதிக்குள் கொண்டுவர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

சொத்துக் குவிப்பு வழக்கு: அமைச்சர் ஐ. பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து!

சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ. பெரியசாமியை விடுவித்த திண்டுக்கல் நீதிமன்றத்தின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.மேலும், அடுத்த 6 மாதங்களின் விசாரணையை முடிக்க வேண்டும் என்று தமி... மேலும் பார்க்க

தமிழகத்தில் மதவாதம் எங்கு இருக்கிறது? மு.க. ஸ்டாலின் - வானதி சீனிவாசன் காரசார வாதம்!

தமிழ்நாட்டில் மதவாத எதிர்ப்பு சக்தி எங்கு இருக்கிறது? எப்படி, எந்த சூழலில் இருக்கிறது என்று சொல்லுங்கள்? என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.தமிழக சட்டப்பேரவையில் இன்று, கோவையில் காரில... மேலும் பார்க்க

குன்றத்தூர், மாங்காடு பகுதிகளில் வங்க தேசத்தினர் 30க்கும் மேற்பட்டோர் கைது

குன்றத்தூர், மாங்காடு பகுதிகளில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்க தேசத்சைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோரை தில்லி போலீஸார் கைது செய்துள்ளனர். குன்றத்தூர், மாங்காடு பகுதிகளில் வங்க தேச நாட்டைச் சேர்ந்தவர்க... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தினர் கைது

விழுப்புரத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தினர் நூற்றுக்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். பொது விநியோகத் ... மேலும் பார்க்க

மணிப்பூரில் இரண்டு தீவிரவாதிகள் கைது

மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட அமைப்பான காங்லீபாக் கம்யூனிஸ்ட் கட்சி (நோயோன்)இன் இரண்டு தீவிர உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர்.ஷகோல்ஷெம் லெம்பா மைதேயி மற்றும் ஷாகோல்ஷெம் ரோமன... மேலும் பார்க்க

கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை வழக்கு: தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்!

கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கடந்த 2003-ல் குப்பநத்தம் கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் அருகே உள்ள குப்பநத்தம் ... மேலும் பார்க்க