திருப்பதி அருகே லாரி - கார் மோதியதில் 5 பேர் பலி! ஒசூரைச் சேர்ந்தவர்கள் எனத் தகவ...
குன்றத்தூர், மாங்காடு பகுதிகளில் வங்க தேசத்தினர் 30க்கும் மேற்பட்டோர் கைது
குன்றத்தூர், மாங்காடு பகுதிகளில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்க தேசத்சைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோரை தில்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.
குன்றத்தூர், மாங்காடு பகுதிகளில் வங்க தேச நாட்டைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக தில்லி போலீஸாருக்கு வந்த தகவலையடுத்து தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில் குன்றத்தூர் மற்றும் மாங்காடு பகுதிகளில் உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்க தேச நாட்டைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோரை தில்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மாங்காடு அடுத்த கொளப்பாக்கம் பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் உரிய ஆவணங்கள் இன்றி இந்த பகுதிகளில் தங்கி சாலையோரங்களில் பழைய பொருட்களை சேகரித்து வந்தது தெரியவந்தது. மேலும் இவர்கள் சட்ட விரோதமாக தமிழகத்திற்குள் வந்தது எப்படி? இவ்வளவு நாள்கள் எப்படி தங்கியிருந்தார்கள்? இவர்களுக்கு தங்குவதற்கு இடம் கொடுத்த நபர்கள் யார்? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தில்லி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது கைது செய்யப்பட்டவர்களில் பெண்கள், பெரியவர்கள் என அனைவரும் இருப்பதால் அவர்களின் முழு விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
அசாமில் காங்கிரஸ் எம்.பி. வாகனம் மீது மர்ம நபர்கள் தாக்குதல்
இவர்கள் இங்கு தங்கி இருந்த நாள்களில் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஏதேனும் உதவி புரிந்தார்களா அல்லது சதி செயலுக்காக சென்னை வந்தார்களா என பல்வேறு கோணங்களில் தில்லி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது இவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள மண்டபத்தைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. சட்டவிரோதமாக தங்கி உள்ள வங்க தேச நாட்டைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.