செய்திகள் :

``காத்தவராயன் கதைப்பாட்டை மூன்றாம் தலைமுறைக்கு கடத்தியவர்'' - மறைந்த கிராமியக் கலைஞர் வெங்கடேசன்!

post image

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள கிழப்பாலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். 93 வயதான இவர் கிராமிய கலைகளில் ஒன்றான காத்தவராயன் கதைப்பாட்டு சொல்வதில் சிறந்து விளங்கியவர்.

கோயில் திருவிழாக்களில் தன் குழுவினருடன் காத்தவராயன் கதையை பேச்சு, பாடல், நடிப்பு, நகைச்சுவை என பல பரிமாணங்களில் நடத்தி மக்களை மகிழச் செய்தவர்.

கதைப்பாட்டை பட்டி தொட்டி எங்கும் பரவச் செய்து தனி அடையாளத்தை பெற்று தந்தவர். தன் வாழ்க்கையை கதைப்பாட்டிற்கு அர்ப்பணித்தவர். இவரால் கதைப்பாட்டு கிராமியக் கலை கவனம் பெற்றது. இசை வாத்தியங்கள் இசைக்க இவர் சொல்லும் காத்தவராயன் கதையை கேட்க பெரும் கூட்டம் கூடுவது வழக்கம்.

காத்தவராயன் கதைப்பாட்டு கலைஞர் வெங்கடேசன்

இதே போல் கடந்த 24-ம் தேதி வெங்கடேசன் வீட்டில் மாலையும், கையுமாக பெரும் கூட்டம் கூடியிருக்கிறது. ஆனால் அவர் கூறும் எப்போதும் காத்தவராயன் கதையை கேட்பதற்காக அல்ல. அவர் மறைந்த செய்தி கேட்டு கிராமியக் கலை மூலம் தங்களை மகிழ்வித்த அந்த கலைஞனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வழியனுப்புவதற்காக பல கிராம மக்கள் திரண்டு வந்ததில் வெங்கடேசன் குடும்பத்தினர் நெகிழ்ந்திருக்கின்றனர்.

இது குறித்து வெங்கடேசன் பேரன் பார்த்திபனிடம் பேசினோம், "கிராமியக் கலைகளில் ஒன்றான கதைப்பாட்டு என்கிற கலை மூலம் காத்தவராயன் கதை பாடுவார் எங்க தாத்தா. அதாவது கோயில் திருவிழாக்களில் மேடைகளில் தன் குழுவினருடன் காத்தவராயன் கதை பாடுவார்.

திருவாரூர், நாகை, கடலூர், காரைக்கால் உள்ளிட்ட பல மாவட்டங்களின் கிராமப்பகுதிகளில் எங்க தாத்தா வெங்கடேசனின் கதைப்பாட்டு மிகவும் பிரபலம். திருச்சி வானொலியில் அடிக்கடி கதைப்பாட்டு நிகழ்ச்சி நடத்தியதால் வானொலி புகழ் வெங்கடேசன் எனவும் அழைக்கப்பட்டார். தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி காத்தவராயன் கதை சொல்வதை உயிராக நேசித்தார்.

கதைப்பாட்டு பாடும் வெங்கடேசன்

இக்கலையை தன்னோடு நிறுத்திக் கொள்ளாமல் மற்றவர்களுக்கும் சொல்லிக்கொடுத்து வளர்த்தார். தன் இரண்டு மகன்கள், பேரப்பிள்ளைகள் என தன் குடும்பத்தினரையும் கதைப்பாட்டு நிகழ்ச்சியில் பங்கெடுக்கச் செய்தார்.

யார்கிட்டேயும் முறைப்படி இதை கத்துக்காம கச்சேரி பாத்து பழகியவர் பின்னாளில் அவரே கதைப்பாட்டு கச்சேரி நடத்த ஆரம்பித்ததாக எங்ககிட்ட சொல்வார்.

பல கிராமங்களில் திருவிழாக்களில் ஆர்கெஸ்ட்ரா, ஆடல், பாடல் போன்ற நிகழ்ச்சிகள் இடம் பிடித்த சமயத்தில் கூட தாத்தா காத்தவராயன் கதை பாட்டு நிகழ்ச்சி நடத்திய கிராமங்களில் கதைப்பாட்டு நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் தந்தனர்.

காத்தவராயன் பிறப்பு, பார்வதி அம்மனாக மாறுவது என 12 வனங்கள் இந்த காத்தவராயன் கதையில் உள்ளது. ஆரம்பகாலத்தில் தாத்தாவே காத்தராயன் கதையில் வரும் ராஜபாட் உள்ளிட்ட பல வேடங்கள் அணிந்து கதைப்பாட்டு பாடிக்கொண்டே நடிப்பார். வயசான பிறகு தோலில் சுருக்கம் விழுந்ததால் பாட மட்டும் செய்தார். தாத்தாவின் மூத்த மகன் என்னோட அப்பா கலைச்செல்வம் மிருதங்கம் வாசிப்பதுடன் வேடமணிந்து நடிக்கவும் வைத்தார்.

மறைந்த கிராமியக் கலைஞர் வெங்கடேசன்

கிட்டதட்ட வில்லுப்பாட்டு டைப்பில் தான் இந்த கதைப்பாட்டு இருக்கும். ஐந்து பேர் நிகழ்ச்சிக்குச் செல்வோம். அப்பா மிருதங்கம் வாசிக்க, சித்தப்பா கீபோர்டு வாசிக்க தாத்தா காத்தவராயன் கதைப்பாடும் போது மொத்தக் கூட்டமும் கைத்தட்டி ரசிக்கும்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வனம் வீதம் 12 நாள் நிகழ்ச்சி நடத்துவார். சில கிராமங்களில் மூன்று அல்லது இரண்டு நாள்கள் நடத்தச் சொல்வார்கள். அப்போது சில வனங்கள் மட்டுமே பாடுவார். தாத்தவோட காலும், அவர் குரல் ஒலிக்காத ஊரும் இல்லை என சொல்லலாம்.

கிட்டதட்ட 65 ஆண்டுகள் காத்தவராயன் கதைப்பாடியிருக்கிறார். திருச்சி வானொலியில் அடிக்கடி நிகழ்ச்சி நடத்தியது தாத்தாவுக்கு தனி அடையாளத்தை தந்தது. அனைவரும் வானொலி புகழ் வெங்கடேசன் என்றே அழைத்தனர்.

என்கண், மாப்பிள்ளை குப்பம், அரித்துவாரமங்கலம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களி ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியாக கதைப்பாட்டு நிகழ்ச்சி நடத்துவது வழக்கம்.

காத்தவராயன் கதைப்பாட்டு

அந்த மக்கள் தாத்தா மீது தனி மரியாதையும் அன்பும் காட்டுவதை பார்த்து நெகிழ்ந்திருக்கிறோம். நானும், என் சித்தப்பா மகனான தம்பியும் தாத்தா குழுவில் இருந்து எல்லாத்தையும் கத்துக்கிட்டோம்.

கிராமியக்கலையான கதைப்பாட்டு செய்வதை தன் உயிராக நேசித்து இக்கலை அழியாமல் காத்து பலருக்கு பரப்பியுள்ளார். கடைசி வரை கச்சேரி நடத்தி வந்த தாத்தா கடந்த 24-ம் தேதி இறந்து விட்டார்.

இதையறிந்த அனைத்து கிராம மக்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். தாத்தா நிகழ்ச்சி நடத்திய விதமும், நடந்து கொண்டதும் அவருக்கு அளப்பரிய மரியாதை கிடைப்பதற்கு காரணம். மக்கள் தாத்தாவை அங்கீகரித்தது போல் அரசும் அங்கீகரித்து மரியாதை செய்தால் கலைக்காக உழைத்த தாத்தாவுக்கு பெருமை.

காவல் தெய்வமான காத்தவராயன்

அவரை தொடர்ந்து நாங்கள் கதைப்பாட்டு நிகழ்ச்சியில் முழு கவனத்தை செலுத்தி வருகிறோம். தாத்தாவின் பெயரை எடுக்க வேண்டும். இக்கலையை காக்க வேண்டும் இது தான் தாத்தாவுக்கு நாங்கள் செய்கின்ற நன்றிக்கடன். கலைக்காக அவர் மட்டுமல்ல தன் குடும்பத்தையும் அர்ப்பணித்தவர். இரு மகன்கள், இரு பேரன்கள் மூலம் இக்கிராமியக் கலையை மூன்றாவது தலைமுறைக்கு கடத்தியிருக்கிறார். நிச்சயம் நாங்கள் தாத்தா வழியில் காத்தவராயன் கதை பாடுவோம் தாத்தாவின் குரலாக ஒலிப்போம். 65 ஆண்டுகள் கலைக்காக உழைத்த எங்க தாத்தாவின் செயலை அரசு கவனத்தில் கொண்டு மரியாதை செய்தால் அது கலைக்கு செய்கின்ற மரியாதை" என்றார்.

தேசிய கொடியேந்தி வந்த உரிமையாளர், தடுப்பை உடைத்த மாடு - கோவையில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஜல்லிக்கட்டு

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டின்‌ மீதிருந்த தடையை நீக்கச் சொல்லி 2017‌ நடத்தப்பட்ட போராட்டங்களைத் தொடர்ந்து அந்த தடை நீக்கப்பட்டு, பல்வேறு மாவட்டங்களில் அதனைத் தொடர்ந்த வருடங்களில் ஐல்லிக்கட... மேலும் பார்க்க

ஜெயலலிதா, பானுமதி, சாவித்ரியை ஃபாலோ செய்யும் நயன்தாரா, வாணி போஜன் - ரிப்பீட் மோடில் ஃபேஷன் டிரெண்ட்!

அது ஒரு கேஷுவல் ஷாப்பிங் நாள். ஒரு பிரபல மால்ல இருக்க பிராண்டட் டிரஸ் கடைக்கு விசிட் அடிச்சேன். அங்கே ஒரு வெள்ளை கலர் டீ சர்ட்டும், ஆலிவ் கிரீன் கலர் பேகி பேண்டும் என்னை 'வா... வா...'னு கூப்பிட, அதை ட... மேலும் பார்க்க

வீடு: முதுகு, கை, கால் வலி வராமல் இருக்க... உங்கள் வீட்டு கிச்சனில் இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்க!

ஒரு வீட்டில் கிச்சன் என்பது முக்கியமான அங்கம். அதன் வடிவமைப்பு சரியாக இருந்து விட்டால் நிம்மதியாக இருக்கலாம். கிச்சன் வடிவமைப்பிற்கு சில விதி முறைகள் உள்ளன அவற்றை தெளிவாக விளக்குகிறார் சென்னையைச் சேர்... மேலும் பார்க்க

Vikatan Play contest : அட எப்படி சிங்கிள் லைனில் எழுதி கலக்கியிருக்கிறார்கள்? | ஒன்று: காதல் கதைகள்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

கோடைகாலத்தில் அதிகம் பருகப்படும் இளநீர் - தேங்காய்க்குள் தண்ணீர் எப்படி வருகிறது தெரியுமா?

வெயில் காலம் வந்ததும் பலரின் பிரதான பானமாக இருப்பது இளநீர் தான். இளநீர் உடலின் சூட்டை தணிக்கும் என்று பலரும் கோடைகாலத்தில் இதனை பருகுவார்கள். மற்ற பழங்களில் இருந்து அதனை பிழியும் போது சாறு வருகிறது, அ... மேலும் பார்க்க

நமக்குள்ளே...

தங்களை விடாமல் துரத்தும் வீட்டு வேலைகள் குறித்து, ‘நானெல்லாம் செத்தாலும், எங்க வீட்டுல சமைச்சு வெச்சுட்டுத்தான் போய் சுடுகாட்டுல படுத்துக்கணும்’ என்று வேடிக்கையாக பெண்களில் சிலர் சொல்வதுண்டு. அவை, வேத... மேலும் பார்க்க