செய்திகள் :

Vikatan Play contest : அட எப்படி சிங்கிள் லைனில் எழுதி கலக்கியிருக்கிறார்கள்? | ஒன்று: காதல் கதைகள்

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

விகடன் App ஐ டவுன் லோட் செய்து, எதைக் கேட்கலாம் என பார்க்கையில் *ஒன்று* காதல் கதைகள்.‌இரா.கண்ணன் மற்றும் ராஜு முருகன் என்ற ஒன்று கண்ணில் விழவே.. அதற்குள் சென்றேன்.‌

ஆனந்த விகடனில் வெளிவந்த 'வட்டியும் முதலும் ' படித்து ராஜு முருகனின் எழுத்துக்களுக்கு ரசிகையாக மாறினேன்.

விளிம்பு நிலை மனிதர்களின் உலகத்தை இவரின் எழுத்துக்கள் மூலமாகத்தான் புரிந்து கொண்டேன். நக்கலும் நையாண்டியும் கலந்த இவரின் எழுத்துக்களுக்காகவே, முதலில் இவர் கதைகளைக் கேட்கலாம் என ஆடியோவை ப்ளே செய்தேன். அத்தியாயம் இரண்டில் வரும் " ஓ பாப்பா லாலி" என்னை மிகவும் கவர்ந்தது..

Vikatan Play

குரு சொல்வதாக ஆரம்பிக்கிறது கதை,.. நண்பர்களில் ஒருவரான கணேஷ் விபத்தில் அடிப்பட்டு ஆஸ்பிட்டலில் அட்மிட் ஆன பின் , அங்கிருக்கும் லாலி என்ற மலையாள நர்ஸுக்காக, நண்பர்கள் ரூட் போடுவதை , நகைச்சுவையாக எழுதப்பட்ட வரிகளைப் படிக்கையில் வாய்விட்டுச் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

கணேஷின் அப்பாவைப் பற்றி இரண்டே வரிகளில் உணர்த்திய விதம் அருமை.. ஆதி ரகசியத்தை அரை ட்ராயர்‌ அணிந்த காலத்திலேயே போட்டு உடைத்தவன் கணேஷ் என்ற வரிகளெல்லாம் நகைச்சுவைக்கு பக்காவான உதாரணங்கள்..

அபூராரின் குலப் பெருமை என்ற வரிகளெல்லாம் , அட எப்படி சிங்கிள் லைனில் எழுதி கலக்கியிருக்கிறார்கள் எனத் தோன்றியது. குருவின் கனவு வாழ்க்கை அபாரம். எழுத்துக்களில் நாமும் குரு, லாலியுடன் சேர்ந்து மேற்குத் தொடர்ச்சி மலையில் பயணம் செய்த உணர்வு வருகிறது.

லாலி நர்ஸ், குருவின் சபரிமலை வசனங்களைக் கேட்டு, ஓஓஓ மணிகண்டனாக்கும் எனக் கூற, நோ நோ ஐ ம் குரு என பதிலளிப்பது அந்த கல்லூரி வயதிற்கே ஏற்ற மாடுலேஷன்கள். பாடகர் யேசுதாஸை கதையில் கொண்டுவந்தது ஹாஹாஹா டைப்..

Vikatan Play

க்ளைமேக்ஸில் , குருவின் ஆசை நிறைவேறாமல் , கணேஷுடன் சண்டைப் போட்டுவிட்டு வெளியேறுவதாக முடித்ததில் , ஏனோ நாமே குருவாக மாறி,காதலில் தோற்றவிட்ட நிலை நமக்குள் வந்து போவதை தடுக்க முடியவில்லை..உண்மையில் நடந்தது என்ன, லாலிக்கு என்னவாயிற்று? கணேஷ் கூறியது உண்மையா? குருவைப் பார்க்கையில் , லாலியின்‌ கண்களில் கசிந்த காதல் மெய்யா?, பொய்யா?.. எல்லாவற்றையும் வாசகர்களின் கற்பனைக்கே விட்டுவிடுகிறது இந்தக் கதை..

-Mrs. J. Vinu

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

கோடைகாலத்தில் அதிகம் பருகப்படும் இளநீர் - தேங்காய்க்குள் தண்ணீர் எப்படி வருகிறது தெரியுமா?

வெயில் காலம் வந்ததும் பலரின் பிரதான பானமாக இருப்பது இளநீர் தான். இளநீர் உடலின் சூட்டை தணிக்கும் என்று பலரும் கோடைகாலத்தில் இதனை பருகுவார்கள். மற்ற பழங்களில் இருந்து அதனை பிழியும் போது சாறு வருகிறது, அ... மேலும் பார்க்க

நமக்குள்ளே...

தங்களை விடாமல் துரத்தும் வீட்டு வேலைகள் குறித்து, ‘நானெல்லாம் செத்தாலும், எங்க வீட்டுல சமைச்சு வெச்சுட்டுத்தான் போய் சுடுகாட்டுல படுத்துக்கணும்’ என்று வேடிக்கையாக பெண்களில் சிலர் சொல்வதுண்டு. அவை, வேத... மேலும் பார்க்க

சென்னையில் ஒரு நாள்! - குறுங்கதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

"வாங்கக்கா காபி சாப்பிடலாம்" - பெண்களின் டீக்கடை சுதந்திரம்; அனுபவப் பகிர்வு | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Nudist: "இந்த கடற்கரைகளுக்கு ஆடை அணிந்துவரத் தடை" - ஜெர்மனி போட்ட புதிய விதி என்ன தெரியுமா?

ஜெர்மனியில் இயற்கை வாழ்வியலை ஆதரிக்கும் மக்கள் பயன்படுத்தும் நிர்வாண கடற்கரைகளில் உடையணிந்து செல்பவர்களுக்குத் தடை விதிக்கப்படுவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. கடற்கரை நகரமான ரோஸ்டாக்கில் அமல்படுத்தப்... மேலும் பார்க்க

Toothpaste: டூத் பேஸ்ட்டில் இருக்கும் வண்ணக் கோடுகள் உண்மையில் எதைக் குறிக்கிறது தெரியுமா?

நான் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களில் ஒன்று டூத் பேஸ்ட். இதனை காலையில் தினமும் பயன்படுத்தி வருவோம். சந்தைகளில் பல்வேறு வகையான டூத் பேஸ்ட்கள் கிடைக்கின்றன. ஒவ்வொருவரும் வெவ்வேறு காரணங்களுக்காக வெவ்வே... மேலும் பார்க்க