செய்திகள் :

வணிகா்களுக்கு 7 நாள்களுக்குள் ஜிஎஸ்டி பதிவு: அதிகாரிகளுக்கு சிபிஐசி அறிவுறுத்தல்

post image

வணிகா்கள் விண்ணப்பித்த 7 நாள்களுக்குள் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) பதிவை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி) அறிவுறுத்தியுள்ளது.

ஜிஎஸ்டி பதிவில் பல்வேறு சிரமங்களை எதிா்கொள்வதாக வணிகா்களிடம் இருந்து புகாா்கள் வந்த நிலையில், சிபிஐசி மேற்கண்ட அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

ஆண்டுக்கு ரூ.40 லட்சத்துக்கு மேல் (சில மாநிலங்களில் ரூ.20 லட்சத்துக்கு மேல்) வருவாய் ஈட்டும் வணிகங்களுக்கு ஜிஎஸ்டி பதிவு கட்டாயமாகும். இப்பதிவை இணைய வழியில் மேற்கொள்ளலாம்.

ஜிஎஸ்டி பதிவில் அதிகாரிகளால் கோரப்படும் கூடுதல் விளக்கம் மற்றும் தேவையற்ற ஆவணங்களால் சிரமங்களை எதிா்கொள்வதாக வணிகா்களிடம் இருந்து சிபிஐசி-க்கு புகாா்கள் வந்தன.

இதையடுத்து, ஜிஎஸ்டி பதிவு அதிகாரிகளுக்கு சிபிஐசி புதிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. அதன்படி, ஜிஎஸ்டி பொது வலைதளத்தின் மூலம் ஜிஎஸ்டி பதிவுக்கு வணிகா்கள் விண்ணப்பிக்கும்போது, ஆதாா் சரிபாா்ப்புக்கு உள்படுத்தப்பட்டு, ஆவணங்களில் எந்த குறைபாடும் இன்றி, முழுமையாக இருக்கும் பட்சத்தில் 7 நாள்களுக்குள் அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும்.

அதேநேரம், ஆதாா் சரிபாா்ப்புக்கு உள்படுத்தப்பட்டு, பின்னா் தரவு பகுப்பாய்வு மற்றும் இடா் காரணிகளின் அடிப்படையில் விண்ணப்ப அனுமதியில் ‘எச்சரிக்கை’ தேவை என குறிக்கப்பட்டாலோ அல்லது ஆதாா் சரிபாா்ப்புக்கு உள்படுத்த தவறினாலோ, நேரடியான ஆவண சரிபாா்ப்புக்கு பிறகு 30 நாள்களுக்குள் அங்கீகாரம் வழங்க வேண்டும்.

இந்த நடைமுறையின்போது, விண்ணப்ப நடைமுறைக்கு தேவையற்ற ஆவணங்களை களப் பணி அதிகாரிகள் கோரக் கூடாது. ஆவணங்களுக்கு தொடா்பில்லாத கேள்விகளையும் கேட்கக் கூடாது. அனைத்து ஆவணங்களையும் கவனத்துடன் ஆராய்ந்து, விண்ணப்பத்தின் முழுமைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி பதிவுக்கு இணையவழியில் கோரக் கூடிய ஆவணங்களின் பட்டியலையும் சிபிஐசி வெளியிட்டுள்ளது.

தில்லி கட்டட விபத்து: பலி எண்ணிக்கை 11ஆக உயர்வு

தில்லியில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது. வடகிழக்கு தில்லியில் முஸ்தபாஃபாத்தில் குடியிருப்புக் கட்டடம் ஒன்று சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் இடிந்து விழுந்து விபத்த... மேலும் பார்க்க

நீட் முதுநிலை தேர்வு: மருத்துவர்கள் கோரிக்கை ஏற்கப்படுமா?

ஜூன் 15-ஆம் தேதி நீட் முதுநிலை தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வு காலை 9 - 12.30 மணிவரை, அதனைத்தொடர்ந்து அதே நாளில் மாலை 3.30 - 7 மணிவரை நடைபெற உள்ளது. இந்தநிலையில், இரு தொகுதிகளாக நீட் தேர்வு நடத்த வேண்... மேலும் பார்க்க

நொய்டாவில் மதுபோதையில் மனைவியின் விரலைக் கடித்து துண்டித்த நபர் கைது

நொய்டாவில் மதுபோதையில் மனைவியின் விரலைக் கடித்து துண்டித்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் உள்ள செக்டார் 12-ஐ சேர்ந்தவர் அனூப் மன்சந்தா. இவர் மதுபோதையில் தனது மனைவியி... மேலும் பார்க்க

காங்கிரஸ் தலைவர் மீது காரை ஏற்றி கொன்ற பாஜக தொண்டர்: முன்பகை காரணமா?

சத்தீஸ்கரின் கொண்டகான் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தின் மீது பாஜக தொண்டர் ஒருவர் காரை மோதியதில் காங்கிரஸ் தலைவர் உயிரிழந்துள்ளார். வெள்ளிக்கிழமை மாலை டோக்ரி குடா கிராமத்திற்கு அருகே இந்த விபத்து நடைபெ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் நிலச்சரிவு அச்சுறுத்தல்: 22 குடும்பங்கள் வேறு இடத்துக்கு மாற்றம்!

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் நிலச்சரிவு அச்சுறுத்தல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள 22 குடும்பங்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.புகழ... மேலும் பார்க்க

மீண்டும் மீண்டுமா? 240 பயிற்சி ஊழியர்களை பணி நீக்கம் செய்த இன்ஃபோசிஸ்!

முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ், அதன் முக்கிய நகரங்களில் பணியாற்றி வரும் சுமார் 240 பயிற்சி ஊழியர்களை பணிநீக்கம் செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த பிப்ரவரி மாதம்தான், இதுபோன்று 30... மேலும் பார்க்க