சென்னை அணியில் 17 வயது இளம் வீரர் அறிமுகம்! சீனியர் வீரருக்கு ஓய்வு!
நீட் முதுநிலை தேர்வு: மருத்துவர்கள் கோரிக்கை ஏற்கப்படுமா?
ஜூன் 15-ஆம் தேதி நீட் முதுநிலை தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வு காலை 9 - 12.30 மணிவரை, அதனைத்தொடர்ந்து அதே நாளில் மாலை 3.30 - 7 மணிவரை நடைபெற உள்ளது.
இந்தநிலையில், இரு தொகுதிகளாக நீட் தேர்வு நடத்த வேண்டாம், ஒரே ஷிப்ட்டில் அனைத்து தேர்வர்களையும் உள்ளடக்கி தேர்வு நடத்த வேண்டுமென மருத்துவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
கடந்த முறை, அதாவது 2024-இல், இரு ஷிப்ட் முறையில் நீட் முதுநிலை தேர்வு நடத்தப்பட்டதில் முதல் ஷிப்ட்டில் தேர்வு எளிமையாக இருந்ததாகவும், ஆனால், இரண்டாம் ஷிப்ட் சற்று கடினமாக இருந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதன் காரணமாக, இரண்டாம் ஷிப்ட்டில் தேர்வு எழுதியவர்கள் கட்-ஆஃப் மதிப்பெண் குறைவாகப் பெற நேர்ந்ததாகவும் மருத்துவர்கள் தரப்பிலிருந்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இம்முறை நீட் தேர்வை ஒரே ஷிப்ட்டில் நடத்த வலியுறுத்தி ‘இந்திய மருத்துவ சங்க இளநிலை மருத்துவர்களின் வளையம்(ஐ.எம்.ஏ - ஜே.டி.என்) மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர். சுமார் 2 லட்சம் மருத்துவர்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு, தகுந்த நடவடிக்கை எடுக்க அவர்கள் அரசை வலியுறுத்தியுள்ளனர்.