KKR : 'ஸ்ரேயஸ் ஐயரை ஏலத்துல விட்டதுக்கு இதுதான் காரணம்' - கொல்கத்தா சிஇஓ விளக்கம...
விடைத்தாளுடன் ரூ. 500: ஆசிரியர்களுக்கு கோரிக்கை வைத்த 10ஆம் வகுப்பு மாணவர்கள்!
பெலகாவியில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத்தாளில் செய்த செயல் அதிர்ச்சியில் ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த ஆண்டுதோறும் பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி நாடு முழுவதும் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் அண்மையில் நடந்து முடிந்திருக்கின்றன. விரைவிலேயே விடைத்தாள்கள் திருத்தப்பட்டு தேர்ச்சி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
கர்நாடகத்தின் பெலகாவி மாவட்டத்தில் 10 ஆம் வகுப்புத் தேர்வு எழுதிய மாணவர்கள் அதில் தேர்ச்சி பெற புதுமையான யுக்தியை கையாண்டிருக்கின்றனர். விடைத்தாளுடன் ரூ.500 நோட்டு வைத்திருப்பது முதல் பல்வேறு கோரிக்கைகளை விடைத்தாள் வழியாக அதனைத் திருத்தும் ஆசிரியர்களுக்கு முன்வைத்துள்ளனர்.
அதில் மாணவர் ஒருவர், நான் தேர்ச்சி பெற்றால் மட்டுமே என் காதலைத் தொடருவேன், மற்றொரு மாணவர், தயவுசெய்து என்னைத் தேர்ச்சி பெறச் செய்யுங்கள், என் காதல் உங்கள் கைகளில் உள்ளது. மேலும் ஒரு மாணவர் ஐயா, இந்த 500 ரூபாயுடன் தேநீர் அருந்துங்கள், தயவுசெய்து என்னைத் தேர்ச்சிப் பெற வையுங்கள்.
இடிசிஐஎல் நிறுவனத்தில் ஆலோசகர் வேலை
இன்னொரு மாணவர், நீங்கள் என்னைத் தேர்ச்சி பெறவைத்தால், நான் உங்களுக்குப் பணம் தருகிறேன் என்று எழுதியுள்ளனர். சில மாணவர்கள் தங்கள் கல்வியைத் தொடர்வது தேர்வு முடிவைப் பொறுத்தது என்று உணர்ச்சிவசப்பட்டு முறையிட்டுள்ளனர். அதில், நீங்கள் என்னைத் தேர்ச்சி பெற வைக்கவில்லை என்றால், பெற்றோர் என்னை கல்லூரிக்கு அனுப்பமாட்டார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனைப் பார்க்கையில், தேர்வுக்கு நன்றாகப் படித்து திறமையை நம்பி தேர்வு அறைக்கு வந்த மாணவர்கள் மத்தியில் தற்போது இப்படியும் மாணவர்கள் உள்ளனரா என்கிற கேள்வி எழாமல் இல்லை.