ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: டிப்ளமோ, பிஇ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
தலைக்கவசம் அணியாத பெண்ணை தடுத்து நிறுத்திய காவல் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு!
மத்திய பிரதேசத்தில் தலைக்கவசம் அணியாத பெண்ணை தடுத்து நிறுத்திய காவல் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மத்திய பிரதேசம் மாநிலம் போபால் நகரில் வாகனச் சோதனையின்போது, 33 வயதான பெண்ணிடம் காவல் அதிகாரிகள் தவறாக நடந்து கொண்டதாகவும், அவர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் காவல் நிலையத்தில் பெண் புகார் அளித்தார். புகாரில் அவர் தெரிவித்ததாவது, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அவத்புரி காவல் நிலையம் அருகே வாகன சோதனைக்காக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.
தொடர்ந்து, பெண்ணிடம் தலைமை காவலர் அதுல் சௌக்சே தவறாக நடந்து கொண்டதாகவும், அதனை மற்றொரு காவலரான ஜிதேந்திரா விடியோ எடுத்துக் கொண்டதாகவும் குற்றம் சாட்டினார். இதனையடுத்து, காவல் அதிகாரிகள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், தங்கள் மீது வழக்குப்பதிவு செய்த பெண் மீது தலைமை காவல் அதுல் சௌக்சேவும் புகார் அளித்தார். அவருடைய புகாரில் தெரிவித்ததாவது, தலைக்கவசம் அணியாமல் வந்ததால்தான், அந்தப் பெண் தடுத்து நிறுத்தப்பட்டார். தொடர்ந்து, தடுத்து நிறுத்தப்பட்டதற்காக தகராறிலும் ஈடுபட்டார் என்று தெரிவித்தனர்.
இருதரப்பினரும் வழக்குப்பதிவு செய்திருப்பதால், சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிக்க:உச்ச நீதிமன்றத்தால் உள்நாட்டுப் போர்: பாஜக எம்.பி.யின் கருத்தை கட்சித் தலைமை நிராகரிப்பு