KKR : 'ஸ்ரேயஸ் ஐயரை ஏலத்துல விட்டதுக்கு இதுதான் காரணம்' - கொல்கத்தா சிஇஓ விளக்கம...
"திமுக-வை நம்பி விடுதலைச் சிறுத்தைகள் இருக்கிறதா?" - திமுக கூட்டணி குறித்து திருமாவளவன் பளீச்
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் பரபரப்பாக தொடங்கியுள்ளன. இந்த நிலையில், இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் முகநூல் நேரலையில் பேசியுள்ளார்.
என்ன பேசியுள்ளார்?
அதில் அவர், "பாசிச பாஜக மெல்ல மெல்ல சாதுர்யமாக காய்களை நகர்த்தி புரட்சியாளர் அம்பேத்காரால் வகுத்தளிக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டங்களை நீர்த்து போகச் செய்யும் அனைத்து வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இதை பார்த்துக்கொண்டு நாம் அமைதியாக இருக்க முடியாது.
தேர்தல் களத்தில் அவர்களை எதிர்ப்பது எவ்வளவு முக்கியமோ, அதை விட பலமடங்கு முக்கியம் அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பது ஆகும்.
ஆனால், இது குறித்த பெரிய அளவிலான விழிப்புணர்வு இன்னும் மக்களிடையே ஏற்படவில்லை.

இரு துருவ அரசியல் விவாதங்கள்...
பாஜகவா... காங்கிரஸா, பாஜகாவா... திமுகவா என்ற இருதுருவ அரசியல் விவாதங்கள்தான் இங்கே போய்கொண்டிருக்கின்றன. இந்த அரசியல் விவாதங்களில் நாம் பங்குகொள்ள வேண்டும். ஆனால், சிக்கிக்கொள்ளக் கூடாது.
தமிழ்நாட்டில் பாஜக வரக்கூடாது என்று நாம் கூறிக்கொண்டிருக்கிறோம். ஆனால், இந்திய அளவில் அவர்கள் அனைத்து இடங்களை வளைத்து பிடித்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டு அரசியலில் பாஜக தேவையற்ற உரையாடல்களைத் திட்டமிட்டு உருவாக்குகிறது. சாதிய மதவாதச் சக்திகளையும், உதிரிகளையும் ஊக்குவிக்கிறார்கள்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் உள்ள மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் நாம் முன்வைக்கும் கருத்துகளினால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குறித்து அவதூறு கருத்துகளை உதிரிகளைக் கொண்டு பரப்புகிறார்கள்.
திமுகவை நம்பி கிடக்கிறோம்...
ஏதோ நாம்... திமுகவை மட்டுமே நாம் நம்பிக் கிடக்கிறோம் என்பதை போன்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள். இந்த அற்பர்களின் அவதூறுகளை நாம் கடந்து செல்கிறோம் என்றாலும் கூட, இயக்கத் தோழர்கள் ஒரு தெளிவைப் பெற வேண்டும்.
தேர்தல் அரசியலில் நாம் எந்த முடிவையும் எடுக்க முடியும். அது ஒன்றும் கம்ப சூத்திரம் இல்லை. எல்லா கதவுகளைத் திறந்து வைப்பது, கூடுதல் பேரம் கிடைக்கும் இடத்தில் கூட்டணி வைத்துகொள்வது ராஜதந்திரம் அல்ல. அது ஒரு சுயநலம் சார்ந்த சந்தர்ப்பவாத அரசியல்.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு கூட்டணியில் தொடர்கிறோம் என்றால் அதற்கு ஒரு தெளிவு வேண்டும். ஒரு துணிச்சல் வேண்டும். தொலைநோக்கு பார்வை வேண்டும்.
இதை புரிந்துகொள்ள முடியாத அற்பர்கள் அவதூறைப் பரப்பி வருகிறார்கள். இதற்கு எதிர்வினையாற்றுகிறோம் என்று நாம் கருத்துகளைச் சொல்ல வேண்டாம்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs