செய்திகள் :

"ஆயிரம் ரூபாய்க்கு மூக்குத்திகூட வாங்க முடியல" - திமுக கூட்டத்தைக் கேள்விகளால் திணறடித்த மூதாட்டி

post image

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வடக்கு ஒன்றிய தி.மு.க சார்பில் படவேடு கிராமத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில், சிறப்பு அழைப்பாளராக அக்கட்சியின் செய்தித்தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா கலந்துகொண்டு, தி.மு.க அரசின் திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து விளக்கிப் பேசிக்கொண்டிருந்தார்.

``கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தைப் பிச்சை காசுனு பா.ஜ.க சொல்கிறது’’ என்று தமிழன் பிரசன்னா பேசியபோது, மேடை முன்பு நின்றுகொண்டிருந்த மாலதி என்கிற மூதாட்டி, "சார்... ஆயிரம் ரூபாய்க்குச் சின்ன மூக்குத்தி கூட எடுத்து போட முடியல. இன்னைக்கு நகை என்ன விலை விக்குது?’’ என்று கேள்வி கேட்டார்.

தமிழன் பிரசன்னா

இதனால், கோபப்பட்ட தமிழன் பிரசன்னா அதட்டும் வகையில் குரலை மேலும் உயர்த்தி, ``பேசாம உக்காரு ஆத்தா. ஆத்தாவுக்கு என்ன ஆசைனா, ஆயிரம் ரூபாய்க்குப் பத்து பவுன் நகை கொடுத்தால்தான் ஆயிரம் ரூபாயை மதிப்பேங்குது..’ என்று ஒருமையில் வசைபாடினார்.

அதற்கு அந்த மூதாட்டி, "சார் நான் அப்படி சொல்லல. ஏழைபட்டவங்க எப்படி நகை எடுத்துப்போடுவாங்க. அதுவும் பொண்ணு குழந்தை வச்சிருக்கிறவங்க என்ன செய்வாங்க?’’ என்றார்.

கடுப்பான தமிழன் பிரசன்னா, ``நான் ஒரு விஷயம் சொல்லட்டுமா, உன் பேர் என்ன? உனக்கு ஆயிரம் ரூபாய் வருதா? வருஷத்துக்குக் கூட்டுனா பன்னிரண்டாயிரம். என்ன வேலைக்குப் போறீங்க. மாசம் எவ்ளோ சம்பாதிக்கிறீங்க...’’ என்று கேட்டார்.

மூதாட்டி, ``எல்லா வேலைக்கும் போறேன். ஒரு நாளை 300 ரூபாய் சம்பாதிக்கிறேன். நீங்க கொடுக்குற ஆயிரம் ரூபாயில மாசம் ஒரு சிப்பம் அரிசி எடுத்துக்கிறேன்’’ என்றார்.

``ஒருநாளைக்கு 300 ரூபாய்னா, 30 நாளைக்கு ஒம்பதாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறீங்க. ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வாங்குறதுக்குச் சில நிபந்தனைகள் இருக்கு.

உங்களுக்கு வர ஆயிரம் ரூபாயை நாளைக்கு நிப்பாட்டுனா என்னைய கேக்கக் கூடாது? இவுங்களே ஒம்பதாயிரம் சம்பாதிக்கிறாங்கனா, இவுங்க வீட்டுக்காரர் எவ்ளோ சம்பாதிப்பாரு’’ என்று மிரட்டல் தொனியில் பேசினார் தமிழன் பிரசன்னா.

அதற்கு மூதாட்டி மாலதி, ``எனக்கு வீட்டுக்காரர் இல்லைங்க..’’ என்கிறார்.

தி.மு.க கூட்டத்தை திணறடித்த மூதாட்டி

தொடர்ந்து பேசிய தமிழன் பிரசன்னா, ``பா.ஜ.க-காரனோட எண்ணோட்டமும், இவுங்க எண்ணோட்டமும் ஒண்ணாத்தான் இருக்கு.

`ஆயிரம் ரூபாயை நிப்பாட்டு. அது பிச்சைக் காசு’னு பா.ஜ.க சொல்லுது. இவுங்க `உன் ஆயிரம் ரூபாயை வச்சி என்ன பண்ணிட முடியும்’னு கேக்குறாங்க.

இங்க பாரும்மா, உனக்கு ரேஷன் கார்டு இருக்கா? அதுக்கு அரிசி வாக்குறீங்களா? அரிசிக்குக் காசு வாங்குறாங்களா? இல்லைல. ஆயிரம் ரூபாயும் வருது. எல்லாமே உங்க வீடுதேடி வருது. ஆனா, ஆயிரம் ரூபாய் பத்தலைனு சொல்ற’’ என்று கொந்தளித்தார்.

வாதம் நீண்டதால் கூட்டத்தை நடத்த முடியாமல் தி.மு.க-வினர் திணறினர். கூடியிருந்த பொதுமக்களும் மூதாட்டியின் ஒவ்வொரு கேள்விக்கும் சத்தமாக சிரித்தனர்.

இதனால், மேடையில் இருந்த தி.மு.க நிர்வாகிகளுக்குக் கடும் கோபம் ஏற்பட்டது. இதையடுத்து, கேள்வி கேட்ட மூதாட்டியை அங்கிருந்து வெளியே அனுப்பிவிட்டு கூட்டத்தை நடத்தி முடித்தனர். இந்த வாதம் தொடர்பான வீடியோ வெளியாகி, சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

"பாஜகவிற்கு விசிக தான் துருப்புச் சீட்டு; பாஜகவின் ஒரே நிலைபாடு இதுதான்!" - திருமா சொல்வது என்ன?

அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இப்போது கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள், தேர்தல் வேலைகள் என தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் பரபரப்பாகி உள்ளன. இந்த நிலையில், கூட்டணி குறித்து... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் பரபரக்கும் நீட் விவகாரம்; 'தைரியமிருந்தால்...' அதிமுகவிற்கு துரைமுருகன் சவால்

அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. சமீபத்தில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகி உள்ளது. பாஜகவின் மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் தமிழ்நாட்டில் நீட... மேலும் பார்க்க

மதிமுக: "நான் அவரைக் காயப்படுத்தியிருந்தால் அதற்கு வருந்துகிறேன்" - மல்லை சத்யா சொல்வது என்ன?

மதிமுக கட்சியின் முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக திருச்சி எம்.பி.யும் வைகோவின் மகனுமான துரை வைகோ நேற்று (ஏப்ரல் 19) அறிவித்தது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. துரை வைக... மேலும் பார்க்க

"துரையும் சத்யாவும் மனம் திறந்து பேசுனாங்க; இனி.." - மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்துக்குப் பின் வைகோ

ம.தி.மு.க கட்சியின் முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக திருச்சி எம்.பி.யும் வைகோவின் மகனுமான துரை வைகோ நேற்று( ஏப்ரல் 19) அறிவித்தது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. துரை ... மேலும் பார்க்க

'மல்லை சத்யா வருத்தம் தெரிவித்தார்; நான் என் பதவியில் தொடர்கிறேன்' - துரை வைகோ

நேற்று மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிவித்திருந்தார். இதற்கு மதிமுகவின் பொது செயலாளர் மல்லை சத்யா உடன் ஏற்பட்ட மோதல் தான் காரணம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில், ... மேலும் பார்க்க

"திமுக-வை நம்பி விடுதலைச் சிறுத்தைகள் இருக்கிறதா?" - திமுக கூட்டணி குறித்து திருமாவளவன் பளீச்

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் பரபரப்பாக தொடங்கியுள்ளன. இந்த நிலையில், இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் முகநூல் நேரலையில் பேசியுள்ளார்.எ... மேலும் பார்க்க