தனியாா் ஹஜ் பயண கட்டணம் பல லட்சம் உயா்வு! வெளிப்படை தன்மை ஏற்படுத்த வலியுறுத்தல...
KKR : 'ஸ்ரேயஸ் ஐயரை ஏலத்துல விட்டதுக்கு இதுதான் காரணம்' - கொல்கத்தா சிஇஓ விளக்கம்
கொல்கத்தா அணியைக் கடந்த முறை சிறப்பாக வழிநடத்தி சாம்பியனாக்கியிருந்தார் ஸ்ரேயஸ் ஐயர். ஆனால், கொல்கத்தா அணி ஸ்ரேயாஷை தக்கவைக்கவில்லை. பஞ்சாப் அணி அவரை ஏலத்தில் எடுக்க இப்போது பஞ்சாப் அணிக்காக ஆடி வருகிறார்.
கொல்கத்தா அணி ஏன் ஸ்ரேயஸ் ஐயரை தக்கவைக்காமல் விட்டது எனும் கேள்வி அனைவருக்குமே இருந்தது. இதற்கு கொல்கத்தா அணியின் சிஇஓ வெங்கி மைசூர் இப்போது பதில் கூறியிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது, “ஒரு வீரரை தக்க வைப்பதில் பலமும், பயனும் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.

பெரும்பாலான மக்கள் இதனைப் புரிந்து கொள்வதில்லை. ஒரு வீரரைத் தக்க வைப்பதில் இருதரப்பிலும் ஒரு ஒற்றுமையான சூழல் என்பது இருக்கவேண்டும். இதில் ஒருதலைபட்சமாக செயல்பட உரிமை இல்லை. பல்வேறு காரணங்களை கருத்தில் கொண்டுதான் ஒரு அணியில் சேர வீரர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.
ஒரு அணியில் ஒரு வீரர் இருக்க வேண்டும் என்ற முடிவை பணமும் அவர்களுடைய மதிப்பும் தான் தீர்மானிக்கிறது. நாங்கள் ஒரு வீரரைத் தக்க வைக்க வேண்டும் என்று நினைத்தால் அந்தப் பட்டியலில் எப்போதுமே முதலிடத்தில் ஸ்ரேயஸ் ஐயர் தான் இருக்கிறார்.
ஏனென்றால் அவர்தான் கேப்டன், எங்கள் அணியை முன்னெடுத்து செல்ல 2022 ஆம் ஆண்டு நாங்கள் அவரைத் தேர்ந்தெடுத்தோம். துரிஷ்டவசமாக 2023 ஆம் ஆண்டு அவருக்குக் காயம் ஏற்பட்டது. அவர் அதிலிருந்து மீண்டும் வந்து தன்னுடைய கேப்டன் பதவியை மீண்டும் பெற்றார். காயமடைந்து மீண்டு வந்த பிறகு ஒரு அணியின் கேப்டனாக தன்னுடைய சிறப்பான செயலை அவர் செய்தார்.
தனிப்பட்ட முறையில் அவருக்கும் எனக்குமான நட்பு நன்றாக இருந்தது. சில நேரங்களில் நமக்கு எது சிறந்தது நமக்கு எந்த பாதை சரியாக இருக்கும் என்று நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். 15 வருடங்களாக நான் ஐபிஎல் மெகா ஏலத்தில் கலந்து கொண்டு உள்ளேன். ஆனால் எனக்கு மிகவும் மன அழுத்தத்திற்கு உரிய ஏலமாக இது இருந்தது. ஏனென்றால் இந்த முறை ஏலத்திற்கான விதிமுறைகள் மிகவும் வித்தியாசமாக இருந்தன.

ஐபிஎல் மெகா ஏலம் என்பது மிகவும் சிறந்த மார்க்கெட் பிளேஸ். அந்த ஏலத்தில் 10 அணியின் உரிமையாளர்களும் தங்களுக்கு வேண்டிய முதன்மையான தேவைகளையும், அதற்கு ஏற்றபடி பட்ஜெட்களையும் கொண்டுள்ளனர். அங்கு தான் வீரர்களின் மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது. இந்த காரணங்கள் எல்லாமே ஒன்று சேர்ந்துதான் ஒரு முடிவை எடுக்க வழிவகுக்கிறது. எனவே இந்த விஷயத்தில் ஸ்ரேயஸ் ஐயரும் இந்த முடிவு சிறந்தது என்று உணர்ந்தார். நாங்களும் அதற்கு ஆதரவளிக்கிறோம்.” என்று கூறினார்.