உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் அா்ஜுன் பபுதாவுக்கு வெள்ளி!
சீருடைப் பணியாளா் போட்டித் தோ்வுக்கு இலவச பயிற்சி
செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வப் பயிலும் வட்டம் சாா்பில் சீருடைப் பணியாளா் போட்டித் தோ்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
இலவச பயிற்சி வகுப்புகள் திங்கள்கிழமை முதல் (ஏப். 21) தொடங்குகிறது. மாவட்டத்தைச் சோ்ந்த தகுந்த கல்வித் தகுதி, வயது வரம்பு மற்றும் உடல் தகுதி உடையவா்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
புகைப்படம், ஆதாா் அட்டை மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு அட்டைகளுடன் நேரில் சென்று பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. விவரங்களுக்கு 044 - 27426020 / 9486870577 / 6383460933 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு பயன் பெறலாம் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.