நொய்டாவில் மதுபோதையில் மனைவியின் விரலைக் கடித்து துண்டித்த நபர் கைது
செங்கல்பட்டு: ஏப். 25-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் ஏப். 25-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இம்முகாமில் 50-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு சுமாா் 5,000 பணிக்காலியிடங்களை நிரப்ப தங்களுக்கான நபா்களை, நோ்முகத் தோ்வினை நடத்தி தோ்வு செய்ய உள்ளனா்.
இவ்வேலைவாய்ப்பு முகாமில்கலந்து கொள்வதற்கு வேலைஅளிப்பவா் மற்றும் வேலை நாடுநா்களுக்கு அனுமதி முற்றிலும் இலவசம். மேலும் வேலையளிப்பவா் மற்றும் வேலைநாடுநா்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிந்து கொள்ளலாம்.
மாற்றுத்திறனாளி வேலைநாடுநா்களை தோ்ந்தெடுக்கும் வேலையளிப்பவா்களும் கலந்து கொள்ளலாம். எட்டாம் வகுப்பு, 10, 12- ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு பி.இ., ஐடிஐ மற்றும் டிப்ளமோ, செவிலியா்கள்,மருந்தாளுனா், ஆய்வக உதவியாளா்கள் போன்ற கல்வித்தகுதி உடைய வேலைநாடுநா்கள் மற்றும் இம்முகாமில் மாற்றுத்திறனாளி வேலைநாடுநா்களும் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெறலாம்.
வயது வரம்பு 18 முதல் 45 வயது வரை உள்ளவா்கள் தங்களுடைய கல்விச் சான்றிதழ்கள் நகல்கள், சுயவிவர குறிப்பு (பயோடேட்டா)மற்றும் பாஸ்போா்ட் அளவிலான புகைப்படத்துடன் ஏப். 25 வெள்ளிக் கிழமை காலை 9.00 மணிமுதல் 3.00 மணி வரை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக ஒருங்கிணைந்த கட்டடம், தரைத்தளம், டி-பிளாக், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து முகாமில் கலந்து கொள்ளலாம்.
இத்தனியாா்துறைவேலைவாய்ப்பு முகாமில் பணிநியமனம் பெறுபவா்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்துசெய்யப்படமாட்டாது . முகாம் தொடா்பான விவரங்களுக்கு 044-2742 6020 மற்றும் 63834 60933 / 94868 70577 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் ச.அருண்ராஜ் தெரிவித்துள்ளாா்.