செய்திகள் :

பூஜாவின் ஆட்டத்திற்கு போட்டியே இல்லை!

post image

நடிகை பூஜா ஹெக்டேவின் நடன அசைவுகள் தொடர்ந்து இணையத்தைக் கலக்கி வருகிறது.

கமர்சியல் திரைப்படங்களில் நடிப்பதற்கான இடம் நடிகைகளுக்கு அபூர்வமாகவே அமைகின்றன. பெரும்பாலும், உடல்மொழியிலோ அல்லது நடனத்திலேயோ ரசிகர்களைக் கவர்ந்தால் உண்டு.

அப்படி, நடிகை பூஜா ஹெக்டே கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இன்ஸ்டா உள்பட சமூக வலைதளங்களில் ரெட்ரோ படத்தில் இடம்பெற்ற கன்னிமா பாடலால் வைரலில் உள்ளார்.

அப்பாடலில், குறிப்பிட்ட வரிகளில் பூஜா ஹெக்டே அழகான நடனத்துடன் நளிமான பாவனைகளையும் செய்திருப்பார். இது ரசிகர்களிடம் அட்டகாசமான வரவேற்பைப் பெற்றது.

பூஜா ஹெக்டே

இதனால், பலரும் இதே பாடலுக்கு பூஜா ஆடியதுபோலவே நடனமாடி ரீல்ஸ் வெளியிட்டனர். ஆனால், இப்போது வரை பூஜாவின் அசைவுகளை யாராலும் முறியடிக்க முடியவில்லை.

கன்னிமா என்றாலே பூஜா ஹெக்டேவின் முகம்தான் முதலில் நினைவுக்கு வருகிறது என்பதே ரசிகர்களின் கருத்தாகவும் இருப்பதால் ‘காவாலா’ நடனத்தில் தமன்னாவுக்கு பெயர் கிடைத்ததுபோல் ரெட்ரோவில் பூஜா ஜெக்டோவுக்கு அமைந்திருக்கிறது.

பல இடங்களில் பூஜா ஹெக்டே இந்த நடனத்தை ஆடினாலும் நேற்று (ஏப். 18) ரெட்ரோ இசைவெளியீட்டு விழாவில் மேடையில் நடனமாடி பலரையும் ஈர்த்துள்ளார்.

இதையும் படிக்க: என் வாழ்க்கை நோக்கம் இதுதான்: சூர்யா

தினப்பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.ஏப்ரல் 21 (திங்கள் கிழமை)மேஷம்:கிரகநிலை:தைரிய ஸ்தானத்தில் ராஹூ - பஞ்சம ஸ்தானத்தில் சந... மேலும் பார்க்க

தில்லி முஸ்தபாஃபாத்தில் கட்டடம் இடிந்து விபத்துக்குள்ளானது - புகைப்படங்கள்

இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.தேசிய பேரிடர் மீட்புப் படை, தில்லி காவல்துறை மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொ... மேலும் பார்க்க

என் வாழ்க்கை நோக்கம் இதுதான்: சூர்யா

நடிகர் சூர்யா தன் வாழ்க்கையின் நோக்கம் குறித்து பேசியுள்ளார்.சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான ரெட்ரோ திரைப்படம் ஆக்‌ஷன் கலந்த காதல் கதையாக எடுக்கப்பட்டுள்ளது. பூஜா ஹெக்டே நாயகியாகவும்... மேலும் பார்க்க