ஆர்பிஐ தங்க கையிருப்பின் மதிப்பு சுமார் ரூ.12,000 கோடி அதிகரிப்பு
நாட்டின் மத்திய ரிசர்வ் வங்கியின் தங்க கையிருப்பு மதிப்பு ஏப்ரல் 11ஆம் தேதியுடன் முடிந்த ஒரு வாரத்தில் ரூ.12,000 கோடி அளவுக்கு அதிகரித்துள்ளது.
பொருளாதார நிலையற்றத் தன்மை, உலக நாடுகளிடைய ஏற்பட்டிருக்கும் பதற்றம் போன்றவற்றால், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை கடுமையாக அதிகரித்திருக்கும் நிலையில் ஆர்பிஐ இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்ட தரவுகளின்படி, ஆர்பிஐ வங்கியின் கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு கடந்த ஒரு வாரத்தில் ரூ.11,986 கோடியாக அதிகரித்துள்ளது. இதன் மூலம், ஆர்பிஐ வங்கியின் கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு ரூ.6,88,496 கோடியாக உயர்ந்திருப்பதாகவும் ஏஎன்ஐ செய்தி தெரிவிக்கிறது.