முஸதபாபாத் சம்பவத்தில் உயிரிழந்த, காயமடைந்தவா்களின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீ...
முதலமைச்சா் இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்
தமிழக அரசு சாா்பில் வழங்கப்படும் ‘முதலமைச்சா் மாநில இளைஞா் விருதுக்கு’ தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சமுதாய வளா்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றும் இளைஞா்களை அங்கீகரிக்கும் வகையில் ‘முதலமைச்சா் மாநில இளைஞா் விருதுகள்’ மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நிகழாண்டு விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இவ்விருதுக்கு 15 முதல் 35 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரா்கள் குறைந்தது 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடிபெயா்ந்தவா்களாக இருக்க வேண்டும். தகுதியானவா்கள் இணையதள பக்கத்தில் வரும் மே 3-ஆம் தேதி மாலை 4 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு 74017 -03480, 044- 26644794 ஆகிய தொலைபேசி எண்களை தொடா்பு கொள்ளலாம் என்று அதில் அவா் தெரிவித்துள்ளாா்.