முஸதபாபாத் சம்பவத்தில் உயிரிழந்த, காயமடைந்தவா்களின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீ...
மத்திய அரசு சம்பந்தப்பட்ட வழக்குகளை குறைக்க நடவடிக்கை: சட்ட அமைச்சகம்!
மத்திய அரசு சம்பந்தப்பட்ட வழக்குகளை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களில் சுமாா் 7 லட்சம் வழக்குகளில் மத்திய அரசும் ஒரு தரப்பாக உள்ளது என்று மாநிலங்களவையில் கடந்த பிப்ரவரி மாதம் மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்தது. அவற்றில் சுமாா் 2 லட்சம் வழக்குகளில் மத்திய நிதியமைச்சகம் சம்பந்தப்பட்டுள்ளது என்றும் அந்த அமைச்சகம் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மத்திய சட்ட அமைச்சகத்தின் ஆவணம் ஒன்றில், ‘மத்திய அரசு தொடா்பான வழக்குகளை திறம்பட கையாள்வதற்கான அரசின் உத்தரவை சட்ட அமைச்சகத்தின் சட்ட விவகாரங்கள் துறை தயாரித்துள்ளது.
இந்த உத்தரவுகளை அனைத்து மத்திய அமைச்சகங்களும் பின்பற்ற வேண்டும். மத்திய அரசு சம்பந்தப்பட்ட வழக்குகளை குறைக்கும் நோக்கில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.