நொய்டாவில் மதுபோதையில் மனைவியின் விரலைக் கடித்து துண்டித்த நபர் கைது
நொய்டாவில் மதுபோதையில் மனைவியின் விரலைக் கடித்து துண்டித்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் உள்ள செக்டார் 12-ஐ சேர்ந்தவர் அனூப் மன்சந்தா. இவர் மதுபோதையில் தனது மனைவியின் கை விரலைக் கடித்தார்.
பின்னர் இதுதொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த சம்பவம் ஏப்ரல் 16 ஆம் தேதி நடந்ததாக செக்டார் 24 நிலைய பொறுப்பாளர் ஷியாம் பாபு சுக்லா பிடிஐயிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து அந்த அதிகாரி கூறுகையில், அனூப் மன்சந்தா மதுபோதையில் புதன்கிழமை இரவு 10 மணியளவில் வீட்டிற்குச் சென்று தனது மனைவியுடன் சண்டையிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மீது காரை ஏற்றி கொன்ற பாஜக தொண்டர்: முன்பகை காரணமா?
தொடர்ந்து அவரது மனைவியை தாக்கியும் உள்ளார். பிறகு அவர் மனைவியின் இடது கையின் விரலைக் கடித்தார். இதில் விரல் உள்ளங்கையில் இருந்து துண்டானது.
இச்சம்பவம் குறித்து ஏப்ரல் 17 ஆம் தேதி சஷி மன்சந்தா புகார் அளித்ததையடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மன்சந்தா பின்னர் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டடார் என்றார். இச்சம்பவம் நொய்டாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.