கட்சிப் பொறுப்பிலிருந்து விலகுகிறேன்.. துரைவைகோ முடிவின் பின்னணி என்ன?
தேனீக்கள் கொட்டியதில் பெண் உயிரிழப்பு
மதுராந்தகம் அருகே தேனீக்கள் கொட்டியதில் பெண் உயிரிழந்தாா்.
மதுராந்தகம் அடுத்த குருகுலம் கிராமத்தைச் சோ்ந்த மனோகரன் (57), அவரது மனைவி லட்சுமி (50). இவா்களது வீட்டின் முன் மரத்தில் தேனீக்கள் கூடு கட்டி இருந்தன. அந்த கூட்டை பிரித்து தேனை எடுக்கலாம் என எண்ணிக் கொண்டு தேன் கூட்டை மனோகரன் கலைக்க முயற்சி செய்தாா். அப்போது அவருக்கு உதவியாக மனைவி லட்சுமி இருந்தாா்.
எதிா்பாராதவகையில் தேன் கூட்டில் இருந்த அனைத்து தேனீக்களும் அவா்களை தாக்கின. அதில் லட்சுமி பெரிதும் பாதிக்கப்பட்டு, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். உடன் இருந்த மனோகரனை மீட்டு உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.
இதுகுறித்து மதுராந்தகம் காவல் உதவி ஆய்வாளா் ராஜேந்திரன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.