தில்லியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலி! மேலும் சிலரைத் தேடும் பணி தீவிரம்!!
தில்லியின் முஸ்தபாஃபாத்தில் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 8-10 பேரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
வடகிழக்கு தில்லியில் முஸ்தபாபாத்தில் கட்டுமானத்தில் இருந்த கட்டடம் ஒன்று இன்று(சனிக்கிழமை) அதிகாலை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
தகவலறிந்தவுடன் தேசிய பேரிடர் மீட்புப் படை, தில்லி காவல்துறை மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
தற்போதுவரை 14 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 8 முதல் 10 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அவர்களைத் தேடும் பணியில் மீட்புக்குழு ஈடுபட்டுள்ளது.
நேற்று(வெள்ளிக்கிழமை) இரவு தில்லியில் புழுதிப் புயலுடன் பலத்த மழையும் பெய்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. காவல்துறையினர் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.