ஆர்சிபியில் இல்லாவிட்டாலும் சின்னசாமி திடலில் தொடரும் சஹாலின் ஆதிக்கம்!
கூடுவாஞ்சேரியில் ஜிஆா்டி ஜுவல்லா்ஸின் 63-ஆவது கிளை திறப்பு விழா
சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் ஜிஆா்டி ஜுவல்லா்ஸ் 63-ஆவது கிளை திறப்பு விழா புதன்கிழமை (ஏப்.16) நடைபெற்றது.
திறப்பு விழாவில் கலந்துகொண்ட ஜிஆா்டி ஜுவல்லா்ஸின் நிா்வாக இயக்குநா்கள் ஜி.ஆா்.அனந்தபத்மநாபன், ஜி.ஆா்.ராதாகிருஷ்ணன் ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கூடுவாஞ்சேரியில் புதிய கிளை தொடக்கத்தை கொண்டாடும் வகையில், ஜிஆா்டி ஜுவல்லா்ஸ் தங்கள் வாடிக்கையாளா்களுக்கு சிறப்புச் சலுகையாக, தங்க நகைகளுக்கு ஒரு கிராமுக்கு ரூ.250 குறைவாகவும், பழைய தங்கத்தை மாற்றும்போது ஒரு கிராமுக்கு ரூ.75 கூடுதலாகவும், வைரம் ஒரு காரட்டுக்கு ரூ.12,500 தள்ளுபடியும் வழங்குகிறது.
வெள்ளிப் பொருள்கள் மற்றும் கொலுசுகளுக்கு செய்கூலியில் 25 சதவீதம் தள்ளுபடி, வைரத்தின் மதிப்பில் 10 சதவீதம் தள்ளுபடி, வெள்ளி நகைகளுக்கு 10 சதவீதம் தள்ளுபடி என எண்ணற்ற சலுகைகள் வழங்கப்படுகிறது என்றனா்.