ஆர்சிபியில் இல்லாவிட்டாலும் சின்னசாமி திடலில் தொடரும் சஹாலின் ஆதிக்கம்!
ஆர்சிபி அணிக்கு பெங்களூரிலுள்ள சின்னசாமி திடல்தான் ஹோம் கிரௌண்டாக (சொந்தத் திடல்) இருக்கிறது. இந்தத் திடலில் யுஸ்வேந்திர சஹால் அதிக விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார்.
ஆர்சிபி அணியில் 2014- 2021வரை மட்டுமே சஹால் விளையாடியுள்ளார். அடுத்ததாக ராஜஸ்தானில் 2022-2024வரை விளையாடினார்.
தற்போது, ரூ.18 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.
கடந்த 4 ஆண்டுகளாக சின்னசாமி அவருக்கு சொந்தத் திடலாக இல்லாமல் இருக்கிறது. அதனால், அவரால் அந்தத் திடலில் குறைவான போட்டிகளிலே மட்டுமே விளையாட முடியும்.
குறைவான போட்டிகள் விளையாடினாலும் சின்னசாமியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரராக சஹாலே முன்னிலை வகிக்கிறார்.
இதுவரை சின்னசாமியில் 54 விக்கெட்டுகள் வீழ்த்திய சஹால் முதலிடத்தில் இருக்கிறார்.
ஒரே ஆடுகளத்தில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் சுனில் நரைன் கொல்கத்தாவில் 72 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும் மலிங்கா மும்பையில் 68 விக்கெட்டுகளுடன் 2ஆம் இடத்திலும் இருக்கிறார்கள்.
ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் (213) எடுத்தவர்களில் சஹால் முதலிடத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Leaving Bengaluru with 2️⃣ massive points. ✌️ pic.twitter.com/GU8BPnvfhb
— Punjab Kings (@PunjabKingsIPL) April 18, 2025