KKR : 'ஸ்ரேயஸ் ஐயரை ஏலத்துல விட்டதுக்கு இதுதான் காரணம்' - கொல்கத்தா சிஇஓ விளக்கம...
IPL 2025: "கமெண்ட்ரில நீங்க என்ன வேணா பேசலாம்; ஆனா..." - ஹர்ஷா போக்லே கேள்விக்கு டிம் டேவிட் பதில்
'பெங்களூரு தோல்வி!'
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடந்திருந்தது.
இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது. பெங்களூரு அணி தோற்றிருந்தாலும் அந்த அணியில் சிறப்பாக ஆடிய டிம் டேவிட்தான் ஆட்டநாயகன் விருதை வென்றிருந்தார்.

'ஆட்டநாயகன் டிம் டேவிட்!'
அப்போது கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லேவுடன் டிம் டேவிட் பேசுகையில், "இந்த பிட்ச்சில் பேட்டிங் செய்வது அவ்வளவு எளிமையானதாக இல்லை. எனக்கு மேலே பேட்டிங் ஆடிய வீரர்கள் பிட்ச் எப்படியிருக்கிறது என்பதைப் பற்றிய தகவல்களை எனக்குச் சொன்னார்கள்" என்று பேசினார்.
நீங்கள் பேட்டிங் ஆர்டரில் மேலே ஆட விரும்புகிறீர்களா? இந்த போட்டியைப் போல அதிக பந்துகளை எதிர்கொண்டால் உங்களால் இன்னும் சிறப்பாக ஆட முடியுமோ?
சில காரண காரியங்களை மனதில் வைத்துத்தான் எங்கள் அணியின் பயிற்சியாளர்கள் இப்படி ஒரு அணியைக் கட்டமைத்திருக்கிறார்கள்.
இந்த இந்த வீரர்கள் இந்த ஆர்டரில் வர வேண்டும் என்பதற்கும் காரணங்கள் இருக்கின்றன. இப்போதைக்கு நான் நல்ல பார்மில் இருக்கிறேன்.
அணிக்கான பங்களிப்பைச் செய்து வருகிறேன். இன்றைய போட்டியைப் போலச் சூழல் ஏற்பட்டால் அங்கேயும் என்னுடைய பங்களிப்பைச் சிறப்பாக அளிப்பேன். கமெண்ட்ரி பாக்ஸிலிருந்து நீங்கள் இந்த மாதிரியான கேள்விகளைக் கேட்கலாம்.

ஆனால், நான் பயிற்சியாளரிடம் கேட்க முடியாது. நாங்கள் ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு சூழலிலும் ஆடுகிறோம். உள்ளூரில் போட்டிகளை வெல்லும் வழியை நாங்கள் கண்டறிய வேண்டும்" என்றார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...