ரூ.8,346 கோடி வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாத எம்.டி.என்.எல்!
IPL 2025: "சஹால்தான் ஐபிஎல்லின் ஆகச்சிறந்த பௌலர்" - ஸ்ரேயாஷ் ஐயர் ஓப்பன் டாக்
'பஞ்சாப் வெற்றி!'
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று சின்னச்சாமி மைதானத்தில் நடந்திருந்தது.
இந்தப் போட்டியைப் பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது. போட்டிக்குப் பிறகு பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஷ் ஐயர் சில முக்கியமான விஷயங்களைப் பேசியிருந்தார்.

'ஸ்ரேயாஷ் உறுதி!'
அவர் பேசியிருப்பதாவது, "வெரைட்டியான விஷயங்கள்தான் வாழ்க்கையைச் சுவாரஸ்யமாக்கும். எல்லா விதமான ஆட்டங்களையும் நாங்கள் ஆடுவதில் மகிழ்ச்சிதான்.
பௌலிங்கில் நாங்கள் எதையுமே முன்கூட்டியே திட்டமிட்டு வைக்கவில்லை. உள்ளுணர்வின் அடிப்படையில்தான் முடிவுகளை எடுத்தேன்.
எங்களுக்கு விக்கெட்டுகளும் கிடைத்துக்கொண்டே இருந்தது. மார்கோ யான்செனுக்கு இந்த பிட்ச்சில் கூடுதல் பவுன்ஸ் கிடைத்தது. அவரைச் சுற்றி மற்ற பௌலர்களும் சிறப்பாக வீசினர்.
பிட்ச் எப்படி இருக்கப் போகிறது என்பதைப் பற்றி எங்களுக்கும் தெரியாது. எங்களின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அவர்களால் சிக்சரே அடிக்க முடியவில்லை.

எதாவது ஒரு பேட்டர் நின்று அதிரடியாக ஆட வேண்டும் என நினைத்தோம். நேஹல் வதேரா அதைச் செய்தார். அவர் பார்மில் இருப்பது நல்ல விஷயம்.
சஹாலுடன் நான் தனிப்பட்ட முறையில் நிறையப் பேசுகிறேன். 'நீங்கள்தான் எங்களின் மேட்ச் வின்னர். நீங்கள் தற்காப்பாக வீசாதீர்கள். நீங்கள் விக்கெட் எடுத்துக் கொடுத்தே ஆக வேண்டும்.' எனக் கூறியிருக்கிறேன்.
அவரிடம் சரிவிலிருந்து சீக்கிரமே மீண்டு வரும் திறன் அபாரமாக இருக்கிறது. ஐ.பி.எல் இன் ஆகச்சிறந்த பௌலர் அவர்தான் என நினைக்கிறேன்" என்றார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...