ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: டிப்ளமோ, பிஇ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
MI vs CSK: "ஜடேஜாவை டாப் ஆர்டருக்கு மாற்ற இதான் காரணம்!" - ஸ்டீபன் ப்ளெம்மிங் சொல்வது என்ன?
'மும்பை இந்தியன்ஸ் Vs சென்னை சூப்பர் கிங்ஸ்!'
மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி வான்கடேவில் இன்று நடக்கவிருக்கிறது.
இரு அணிகளும் தலா 7 போட்டிகளில் ஆடியிருக்கின்றனர். மும்பை அணி 3 போட்டிகளிலும் சென்னை அணி 2 போட்டிகளிலும் வென்றிருக்கின்றன.

இரண்டு அணிகளும் கட்டாயம் வென்றே ஆக வேண்டிய நிலையில் இருக்கின்றன.
இந்நிலையில், போட்டிக்கு முன்பாக சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ப்ளெம்மிங் பத்திரிகையாளர்களைச் சந்தித்திருந்தார். சில முக்கியமான விஷயங்களைப் பேசியிருந்தார்.
'ஸ்டீபன் ப்ளெம்மிங் பேச்சு!'
ஸ்டீபன் ப்ளெம்மிங் பேசியதாவது, ''எங்களுக்கு இதுவரைக்கும் கிடைத்திருக்கும் முடிவுகளால், எங்கள் அணியிலிருந்து லெவனில் நிறைய வீரர்களைப் பயன்படுத்திவிட்டோம். அனுபவமான வீரர்களைப் பயன்படுத்தி அணிக்கு சாதகமான முடிவுகளை எட்டுவதுதான் எங்களின் பாரம்பர்யம்.

ஆனால், உங்களுக்கு ஏதுவான ரிசல்ட் கிடைக்கவில்லையெனில் அணியில் இருக்கும் மற்ற வீரர்களையும் பரிச்சார்த்த முறையில் பயன்படுத்திதான் ஆக வேண்டும்.
அதனால்தான் கடந்த ஆண்டுகளை விட அதிக வீரர்களை லெவனில் பயன்படுத்தியிருக்கிறோம். இந்தத் தொடரில் உயிர்ப்போடு இருக்க வேண்டும் என்பதில்தான் குறியாக இருக்கிறோம்.
ஒருவேளை அடுத்த சில போட்டிகளில் தோற்றால் நாங்கள் வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு சில வீரர்களை முயன்று பார்க்க வேண்டும்.
இந்தத் தொடரில் வலுவாக இருக்க வேண்டுமெனில் உங்களின் டாப் 3 அல்லது டாப் 4 வீரர்கள் அணியின் 75% ரன்களை அடிக்க வேண்டும்.
புள்ளிப்பட்டியலில் இப்போது மேலுள்ள அணிகளைப் பாருங்கள் அவர்களுக்கு அதுதான் நடந்திருக்கிறது. ஒரு அணியாக நாங்களும் அதை உணர்ந்திருக்கிறோம்.
தொடரில் தொடர்ந்து நீடித்திருக்க எங்கள் வீரர்களிடமிருந்து இன்னும் கொஞ்சம் அதிகமான செயல்பாடு தேவைப்படுகிறது. ரச்சின் சிறப்பாகத்தான் ஆடுகிறார்.

ஆனால், அவரும் இன்னும் கூடுதலாகப் பங்களிக்க வேண்டும். அது அவருக்கும் தெரியும். ஜடேஜாவிடமிருந்தும் நாங்கள் இன்னும் அவரின் சிறப்பான ஆட்டத்தைப் பார்க்கவில்லை.
அவரை டாப் ஆர்டருக்கு மாற்றியிருக்கிறோம். அங்கே அவரைக் கொஞ்சம் முயன்று பார்க்க விரும்புகிறோம். ருத்துராஜ் இல்லாத இடத்தை நிரப்புவது கடினம்தான்.
பேட்டிங்கை பொறுத்தவரை எங்களின் எல்லா வீரர்களும் இன்னும் சிறப்பாக ஆடியே ஆக வேண்டும்" என்றார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...