செய்திகள் :

தூத்துக்குடி: மதுபோதையில் தகராறு; மருமகனைப் பாறாங்கல்லால் தாக்கி கொன்ற மாமனார்; என்ன நடந்தது?

post image

தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர்- கீரைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணகுமார். இவரது மூத்த மகள் சங்கீதா.  

இவருக்கும் நாசரேத் கீழத்தெருவைச் சேர்ந்த மாடசாமி என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

மாடசாமி லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். மாடசாமி அடிக்கடி குடித்துவிட்டு மனைவி சங்கீதாவிடம் சண்டை போட்டு வந்துள்ளார்.

இதனால் மகள் சங்கீதா கருவுற்றிருப்பதை அறிந்த சரவணகுமார், தனது வீட்டின் அருகே ஒரு  வாடகை வீட்டில் குடி அமர்த்தியுள்ளார்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சங்கீதாவுக்குப் பெண் குழந்தை பிறந்தது. பின்னர் இரண்டு மாதம் கழித்து மனைவியை அழைத்து செல்ல மாடசாமி, புதியம்புத்தூர் வந்துள்ளார்.

உயிரிழந்த மாடசாமி

அப்போது அவர் மதுபோதையில் வந்ததாக தெரிகிறது. இதனால் அவரது மாமனார் சரவணகுமார், தன் மகளை அனுப்ப மறுத்து விட்டார்.

இதனால் மாடசாமி, மாமனார் மீது கோபத்துடன் இருந்துள்ளார். இதற்கிடையே நேற்று இரவு மீண்டும் மது போதையில் புதியம்புத்தூர் வந்த மாடசாமி, மனைவி மற்றும் குழந்தையைத் தன்னுடன் அனுப்பும்படி கூறியுள்ளார்.

ஆனால், மாமனார் சரவணகுமார் இப்போதைக்கு மகளை அனுப்ப முடியாது என்று கூறியுள்ளார்.

இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் ஆத்திரமடைந்த மாடசாமி, மாமனார் சரவணகுமார் மீது பாறாங்கல்லைத் தூக்கி வீசியிருக்கிறார்.

இதில் அவர் விலகிக் கொள்ளவே ஆத்திரம் அடைந்த சரவணகுமார், அதே பாறாங்கல்லைத் தூக்கி மாடசாமி மீது வீசினார். இதில் அவர் கீழே விழுந்தார்.

அப்போது அவரது அருகில் இருந்த சரவணக்குமாரின் இரண்டாவது மருமகன் ஆதிலிங்கம் என்பவர், அருகில் இருந்த அம்மிக் குழவியால் மாடசாமியின் தலையில் தூக்கிப் போட்டுள்ளார். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.

பின்னர் இருவரும் சேர்ந்து அவரை ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதனை மருத்துவர்கள். அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த புதியம்புத்தூர் காவல் நிலைய போலீஸார், சரவணகுமார், ஆதிலிங்கம் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

திருச்சி: பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் இருவர் கைது; பின்னணி என்ன?

திருச்சி மாவட்டம், முசிறி பகுதியைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு, 7-ம் வகுப்பு படிக்கும் சகோதரிகள் இருவர் பள்ளிக்கு வந்த நிலையில் மயங்கி உள்ளனர். இருவரையும் ஆசிரியர்கள் அதே பகுதியிலுள்ள அ... மேலும் பார்க்க

மொட்டைமாடியில் கஞ்சா வளர்த்த மத்திய அரசு அதிகாரி; தென்னையில் கள் இறக்கும் தொழிலாளியால் சிக்கினார்!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய கணக்கு மற்றும் தணிக்கைத்துறை அலுவலகத்தில் அஸிஸ்டெண்ட் ஆடிட் ஆப்பிசராக ராஜஸ்தானைச் சேர்ந்த ஜெதின்(27) என்பவர் பணிபுரிந்துவந்தார். இவர் திருவனந்தபுரம் கம்லேஸ்... மேலும் பார்க்க

மதுரையில் கடத்தப்பட்ட தொழிலதிபர்; நாக்பூர் வரை ஃபாலோ செய்த போலீஸ்; இரு வாரத்திற்குப் பின் மீட்பு

கடந்த 6-ஆம் தேதியன்று கடத்தப்பட்ட பிரபல தொழிலதிபர் சுந்தரராமன் மதுரை காவல்துறையினரால் நேற்று மீட்கப்பட்டார். இந்த கடத்தலில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுகைது செய்ய... மேலும் பார்க்க

31 வருடங்களுக்குப் பிறகு தூசுதட்டப்பட்ட வழக்கு; 32 வயது இளைஞன் 63 வயதில் AI மூலம் சிக்கியது எப்படி?

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகரக் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 1994-ம் ஆண்டு கொலை வழக்கொன்று பதிவானது. அந்த வழக்கில் இரண்டுப் பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் இர... மேலும் பார்க்க

சென்னை: ரூ.17 லட்சம், 4 செல்போன்கள் - மாப்பிள்ளை என அழைத்து ஏமாற்றிய மணமகளின் அப்பா!

சென்னை வில்லிவாக்கம் நியூ ஆவடி சாலையில் வசித்து வருபவர் ஜெயபிரகாஷ் (31). இவர் வில்லிவாக்கம் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு ஜெயபிரகாஷ், மணமகள் தேவை என் திருமண தக... மேலும் பார்க்க

தலைக்கேறிய மதுபோதை... தந்தையை கட்டையால் அடித்துக் கொன்ற மகன்! - திருச்சி அதிர்ச்சி

திருச்சி, திருவானைக்காவல் அழகிரிபுறம் அருகே உள்ள ஏ.யூ.டி நகரில் வசித்து வந்தவர் சோமசுந்தரம் (வயது: 45). இவர், சமயபுரம் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். இவரது மகன் மோகன்ர... மேலும் பார்க்க