KKR : 'ஸ்ரேயஸ் ஐயரை ஏலத்துல விட்டதுக்கு இதுதான் காரணம்' - கொல்கத்தா சிஇஓ விளக்கம...
31 வருடங்களுக்குப் பிறகு தூசுதட்டப்பட்ட வழக்கு; 32 வயது இளைஞன் 63 வயதில் AI மூலம் சிக்கியது எப்படி?
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகரக் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 1994-ம் ஆண்டு கொலை வழக்கொன்று பதிவானது.
அந்த வழக்கில் இரண்டுப் பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் இருவருமே, அரக்கோணத்தில் உள்ள ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமான தளத்தில் பணிபுரிந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.
முதல் குற்றவாளியான சௌத்ரி என்பவர் அப்போதே கைது செய்யப்பட்டார். நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு 2005-ம் ஆண்டு, சௌத்ரிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

ஆனால், இரண்டாவது குற்றவாளியான அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த பாஸ்கர் ஜோதி கோகோய் என்பவர் போலீஸாரிடம் பிடிபடாமல் தலைமறைவாகிவிட்டார்.
கோகோய் தப்பியோடிய போது, அவருக்கு வயது 32. இவ்வழக்கு 31 வருடங்களைக் கடந்த நிலையில், ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி., விவேகானந்த சுக்லா அந்த வழக்கின் கோப்புகளைத் தூசுதட்டினார்.
கோகோயைப் பிடிக்க அரக்கோணம் நகரக் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தங்க குருநாதன் மற்றும் எஸ்.ஐ நாராயணசாமி தலைமையில் தனிப்படை அமைத்தும் தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டார் எஸ்.பி விவேகானந்த சுக்லா.
கோகோய் 63 வயதில் இப்போது எப்படியிருப்பார், அவரின் அடையாளம், உருவத் தோற்றம் என எல்லாமே மாறியிருக்குமே எனப் பல்வேறு கோணங்களில் போலீஸார் யோசித்தனர்.

32 வயதில் கோகோய் இருந்த புகைப்படத்தில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 63 வயதில் எப்படியிருப்பார் என வரைந்தனர்.
அந்த உருவத்தை வைத்து அலசியபோது, அஸ்ஸாம் மாநிலம் திப்ருகார் மாவட்டத்தில் இருப்பது தெரியவந்தது. அங்கு விரைந்த தனிப்படை போலீஸார், ஏப்ரல் 18-ம் தேதி கோகோயைக் கைது செய்தனர்.
இதையடுத்து, அவரைத் தமிழ்நாட்டுக்கு அழைத்துவருவதற்கான ஏற்பாடுகளையும், சட்ட நடைமுறைகளையும் போலீஸார் துரிதப்படுத்தியிருக்கின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb