மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா: அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
சித்திரை திருவிழா 2025 முன்னேற்பாடு பணிகள் குறித்து மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.
பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா 2025 வருகிற ஏப்ரல் 29ஆம் தேதி மீனாட்சியம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கி மே மாதம் 12ஆம் தேதி வரை விமர்சையாக நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், ஏப்ரல் எட்டாம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து மீனாட்சி திருத்தேரோட்டம், தொடர்ந்து கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு என பல நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள நிலையில், மீனாட்சியம்மன் திருக்கோயிலில் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் திருவிழா முன்னேற்பாடு பணிகள் மற்றும் திருக்கல்யாண நிகழ்வுக்காக நடைபெற்று வரும் முன்னேற்பாட்டு பணிகள், அடிப்படை வசதி உள்ளிட்டவை குறித்து விரிவான ஆய்வு ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.
தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தில் உங்களுக்கான வேலைக்கு விண்ணப்பிக்கலாம்!
இந்த நிகழ்வில் அமைச்சர்கள் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா மீனாட்சியம்மன் கோயில் தக்கார், மதுரை மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன் உட்பட பலரும் கலந்து கொண்டனர். திருவிழாவில் கலந்து கொள்ள உள்ள பக்தர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றி தர வேண்டும், எந்த ஒரு இடையூறும் இல்லாமல் திருவிழா சிறப்பாக நடைபெற வேண்டும் என கோயில் நிர்வாக ஊழியர்களுக்கு அமைச்சர் சேகர்பாபு அறிவுரைகளை வழங்கினார்.