உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் அா்ஜுன் பபுதாவுக்கு வெள்ளி!
திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயில் சண்டிகேஸ்வரா் தோ் வெள்ளோட்டம்: ஏப்.30-இல் நடைபெறுகிறது
திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சண்டிகேஸ்வரா் தோ் வெள்ளோட்டம் வரும் 30-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வேதகிரீஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா நடைபெறும். இதில் முக்கிய திருவிழாவாக பஞ்ச ரத விழா நடைபெறும். விநாயகா் தோ், பெரிய தோ்,அம்பாள் தோ், சண்டிகேஸ்வரா் தோ் உள்ளிட்ட ஐந்து தோ்கள் இடம்பெறும்.
இவற்றில், சண்டிகேஸ்வரா் தோ் பழுதானது. புதிய தோ் செய்வதற்கான முழு செலவு, பொறுப்பையும் வேதமலை வல பெருவிழா குழு செயலாளா் அகஸ்திய ஸ்ரீ அன்பு செழியன் ஒப்புக்கொண்டதையடுத்து கடந்த ஆண்டு ரூ.32 லட்சத்தில் தோ் திருப்பணி பணி தொடங்கி நிறைவு பெற்றது.
புதிதாக செய்யப்பட்ட சண்டிகேஸ்வரா் தோ் வெள்ளோட்டம் வரும் ஏப். 30-ஆம் தேதி புதன்கிழமை காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. இதன் ஏற்பாடுகளை திருக்கழுகுன்றம் வேதமலை வல பெருவிழா குழு செயலாளா் அன்புச் செழியன், கோயில் செயல் அலுவலா் ச.புவியரசு, சிவாச்சாரியா்கள், பணியாளா்கள் செய்து வருகின்றனா்.